பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இவ்வாறு, கின்ற இடத்திலிருந்தே குறிபார்த்து எறி. யும் ஆட்டத்திற்கு லாடம் உதவியாக இருந்தது. ஆரம்ப காலத்தில், குதிரை லாடம் எவ்வளவு கனம் இருந்தது. என்பதற்கு ஆதாரம் இல்லை. பிற்காலத்தில், பந்தயக் குதிரைகளுக்குக் கட்டப்பட்ட லாடத்தைப் பயன்படுத்தி எறிந்தபோது, அது 32 அவுன்சு எடையுள்ளதாக இருந்தது. என்று வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன. அதற்குப் பிறகு இருந்த குதிரை லாடம், 4 பவுண்டு எடைகூட இருந்த தாகவும் வரலாற்ருசிரியர்கள் கூறுகின்ருர்கள்.

உதவியாளர்கள் உற்சாகமாகவும் உல்லாசமாகவும் ஆடி மகிழ்வதைக் கண்ட இராணுவ வீரர்கள், இந்த ஆட்டத் தினே ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அதற்கு மேல் அவர் களால் வாளா இருக்க முடியவில்லை. தாங்களும் மெல்ல. மெல்ல ஆடத் தலைப்பட்டார்கள். சிப்பாய்கள் ஆடத் தொடங்கிய நேரமோ என்னவோ தெரியவில்லை; இந்தக் குறிபார்த்து ஓரிடத்திற்கு எறியும் ஆட்டம், இராணுவ ஆட்டமாகவே ஆகும் தன்மையில் விரிவடைந்து விட்டது.

இராணுவ ஆட்டமென ஆனதால், எல்லோரும் இந்த லாடம் எறியும் ஆட்டத்த்ை ஆடி மகிழத் தொடங்கினர். எல்லோரிடையே பரவும் நல்லதோர் கிலேயையும் இந்த ஆட்டம் பெற்று பெருமையுற்றது.

சிப்பாய்களுக்கு அப்பால்

இராணுவத்தினர் போகுமிடங்களுக்கெல்லாம் குதிரை cumu ib Groupth -gll Loph (Horse Shoe Pitching) GLT53; தொடங்கியது. ரோமானியர்கள் இங்கிலாந்து நாட்டினை வெற்றி கொண்டபொழுது, அங்கேயும் தங்க நேரிட்டது. ரோமானிய வீரர்கள் தங்களுக்குள் ஆடி மகிழ்ந்த இந்த ஆட்டத்தைப் பார்த்த பொதுமக்களுக்கும் விருப்பம் ஏற். .[نئی ما-الا