பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

காலம் மாறியது. இங்கிலாந்து மக்களுக்குக் குதிரை லாடம் எறியும் ஆட்டம் என்று ஒன்று இருந்தது கினேவுக் குள் வந்தாலும், செயலுக்குள் வராத நிலைமையிலேயே நிழலாடிக்கொண்டிருந்தது. அந்த நிழலுக்கும் செயல்: வடிவம் ஊட்டுகின்ற காலமாக ஒரு நாள் அமைந்தது.

ஒருநாள் தேவன் (Devon) என்ற இடத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக பார்த்தபோது, மெலிந்த தட்டையான குதிரை லாடங்களே சிலர் கண்டு பிடித்தார்கள். அவைகள், ரோமானிய சேனையில் இருந்த குதிரைகளின் கால்களில் கட்டியிருந்த லாடங்கள்தான் என்பதையும் பலர் உணர்ந்: தனர். அதன் பின்னே பழைய பாச உணர்வுடன், ஆவேச நினைவுடன், அவற்றை எறிந்தாடவும் தொடங்கினர்.

கூடார உதவியாளர்கள் கூட்டத்தில் தொடங்கிய இந்த ஆட்டம், சிரமறுக்கும் சிப்பாய்கள் மத்தியிலே செழிப்பாகப் பரவியது. சிப்பாய்களிடமிருந்து வேடிக்கை பார்த்த பொதுமக்களிடம் போய் அடைக்கலம் புகுந்தது. "பொழுது போகவில்லையே என்று, போரடித்துக் கொண் டிருந்த பிரபுக்கள் பார்வையிலே, பொதுமக்கள் ஆடிய ஆட்டம் பட்டுவிட்டது. அவர்களும் "சிக்கெனப் பிடித்தேன்’ என்று சொல்லாமல் பிடித்துக்கொண்டு செயலிலே காட்டத். தொடங்கி விட்டார்கள். -

பிரபுக்களிடமிருந்து பெருந்தனக்காரர்கள், பணக் காரர்கள் என்று வசதியுள்ளவர்களிடம் வசமாகப் போய். மாட்டிக் கொண்டது லாடம் எறியும் ஆட்டம். கொழுப் பேறிக் கிடக்கும் தங்கள் தேகத்தைக் குறைக்க, அவர்கள் பல மாதிரியான விளையாட்டுக்களை விரும்பி ஆடுவதுண்டு. ஆல்ை, எதுவும் கஷ்டமானதாக இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் தலையாய கொள்கையாகவும். இருந்தது. - -

லாடமோ கனமில்லாதது. இலேசானது. அதை கின்றவாறு குறிபார்த்து எறிதல், பிறகு குனிந்து எடுத்தல்.