பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

لائ4ے

இதபோல் ஆட்ட அமைப்பு முறை இருந்ததால், ஊளேச் .சரீரத்தைக் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ள வும், பொழுதை மகிழ்ச்சிகரமாகப் போக்க உதவும் ஆட்டமாகவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதல்ை, சீரும் சிறப்புமிக்கவர்களுக்கிடையே இது செல்லக் குழந்தையாகிவிட்டது.

கனம் அதிகமில்லாத லாடம் எறியும் ஆட்டத்தில் பங்குகொள்ள பெண்கள் குழாமும் திரண்டெழுந்தது. அவர்கள் முன் வராத துறைகள்தான் உண்டோ அன்றே அவர்கள் ஆற்றல் அப்படித்தானே இருந்தது! பெண்கள் ஆடியதைக் கண்ட சிறுவர் குலமும் முன்னே நடந்தது. இலேசான லாடத்தை எறியும் ஆட்டம் இவர்களிடையே .பரவியது.

வாலிபர்களும் ஆடவேண்டும் என்று விரும்பினர். ஆல்ை, வலிமை துள்ளி விளையாடும் அவர்கள் வாலிபத்திற் கேற்ப, சற்று கனமான பொருள் தேவைப்பட்டது. அவர்களுக்கு கைகொடுக்க வந்ததுதான் கோயட்ஸ்' என்ற இரும்புத் தட்டாகும். *

கோயட்சைக் கொண்டுவா !

கோயட்ஸ் (Quoits) என்ருல், இரும்புக் தட்டு என்று பொருள்படும். ஒலிம்பிக் பந்தயத்தில் அமைந்திருந்த தட்டினே (Discus) கினைவுபடுத்துவதாக அது அமைக் திருந்தது. இந்த இரும்புத் தட்டினை இனி, கோயட்ஸ் என்றே அழைப்போம்.

கோயட்ஸ், இரும்பு வளையம் போன்றதொரு சீரான அமைப்புடையதாகும். அது கட்டையான வடிவம் கொண்டதாகும். எக்காரணத்தைக் கொண்டும், 9 பவுண்டுக்கு (4:082 கிலோ கிராம்) மேற்படாத எடை :யுடனேதான் அமைக்கப்பட்டிருந்தது. பொதுவாக, அக்தக்