பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

ஆனால், அதற்கடுத்த நூற்ருண்டில், புகழ்ந்த வாய்கள் புழுதிவாரித் தாற்ற ஆரம்பித்தன. கனமான இரும்பு வ8ளயத்தைத் தூக்கியெறிந்து விளையாடுவது என்னவோ போலிருக்கிறது என்று பலர் எண்ணத் தொடங்கினர். அத்துடன், இது அறிவாளிகளுக்கு உகந்த ஆட்டமல்ல. பிரபுக் குடும்பத்தினருக்கும் பெருந்தனக்காரர்களுக்கும் பொருத்தமான ஆட் ட ம ல் ல’ என்று வெறுத்துப் பேசியதோடு விலக்கவும், விலகவும் தலைப்பட்டனர்.

வசதி படைத்தவர்களின் வெறுப்புக்கு ஆளான கோயட்ஸ் ஆட்டத்தை. உழவர் பெருங்குடி மக்களும், உழைப்பாளர் வர்க்கமும் ஏற்றுக்கொண்டனர். இதுவே உன்னதமான ஆட்டம், உற்சாகத்தை ஊட்டுகின்ற ஆட்டம்’ என்று அவர்கள் உணர்வு பூர்வமாகக் கூறிய துடன் ஆடியும் மகிழ்ந்தனர். அதற்குக் காரணமும் இருக்கத்தான் இருந்தது.

கனமான இரும்புத் தட்டை தூக்கி எறியும் தன்மையில் உள்ள முரட்டுத்தனமும், வலிமை சார்ந்த செயலாற்றலும் ஆட்டத்தில் அதிகமாக இருந்ததே. அவர்கள் அதிகமாக விரும்பி ஆடக்காரணமாய் அமைந்து விட்டிருந்தது.

பிரபுக்களும் பெண்களும் சிறுவர்களும் குதிரை லாடம் எறியும் ஆட்டத்தை ஒருபுறம் ஆடிமகிழ, மறுபுறம் கனமான கோயட்ஸ் தட்டை தூக்கி எறிந்து வாலிபர் களும், உழைப்பாளர்களும். ஆடி மகிழ்ந்தனர். இரண்டு வகையான ஆட்டங்களும் மக்கள் மத்தியிலே இடம் பெற்று வளர்ச்சிகொண்டது. -

சிப்பாய்களுக்குக் குதிரை லாடம் எறியும் ஆட்டத்தில் ஆர்வம் குறையாமலே இருந்ததும் ஒரு காரணம். ஆங்கில இராணுவ சிப்பாய்கள் அமெரிக்காவில் குடியேற்றம் பெற்றபோது, அவர்கள் கூடவே குதிரை லாடம் எறியும்

ஆட்டமும் போனது. இங்கிலாந்தில் வசித்த மக்களில்