பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.

ஆட்டத்திலிருந்தும், கோயட்ஸ் என்ற ஆட்டத்திலிருந்தும் உருவானதாகும். இரண்டு ஆட்டங்களின் தன்மைகளும் இரண்டறக் கலந்தே ஒரு புதிய ஆட்டமாக வடிவெடுத்தது என்பது வரலாறு. ஆகவேதான், ஆரம்ப காலத்திலிருந்தே விளக்கமாக எழுத நேர்ந்தது. -

குதிரை லாடம் எறியும் ஆட்டமும் கோயட்ஸ் ட்டமும் எப்படி உருவாகி வந்தன என்பதை இதுவரை அறிந்து கொண்டோம். இனி, கோயட்ஸ் ஆட்டம் வளையப் பந்தாட்டமாக எவ்வாறு வடிவம் பெற்றது என்பதை காண்போம்.

ஆட்டத்தில் ஆர்வம் அதிகமாக ஆக, கோயட்ஸ் தட்டை அதிக எடையும் இல்லாமல், அதிக இலேசானதாகவும் இல் ல்ாமல் ஏற்றதொரு எடையுள்ளதாக அமைத்துக் கொண்டு, இங்கிலாந்து மக்கள் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தனர்.

பெரியவர்கள் ஆடிமகிழும் இந்த ஆட்டத்தைப் பார்த்த சிறுவர்களும், தாங்களும் அதேபோல் ஆட விரும்பினர். ஆனல், இரும்புத் தட்டைத்துக்கி எறிந்து ஆடமுடியுமோ? ஆகவே, அவர்களுக்கு ஏற்றதொரு தன்மையால் வளையம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முனைந்தனர். அதாவது ரப்பரால் வளையத்தைச் செய்து அதனைத் தாக்கியெறிந்து ஆடத் தெடங்கினர்கள்.

கடற்கரை மணற் பகுதிகளில் காற்று வாங்கவும், ஓய்வுக்காகவும் சென்ற பெரியவர்கள் கோயட்ஸ் ஆட்டத்தை ஆடிமகிழ்ந்தார்கள். இரும்புத் தட்டுக்குப் பதிலாக ரப்பர் வளையமும், இரும்புக் கம்பி ஊன்றப்படுவதற்குப் பதில் ஆண்வெட்டியையும் ஊன்றிக் குறிபார்த்து எறிந்து ஆடி முகிழ்ந்தனர். o -

. வீட்டில் இருக்கும்போதுகூட, சிறுவர்கள் தங்கள் விட்டில் சுவற்றில் பதிக்கப்பட்ட முளேக்கம்புகளில் ரப்பர். 6մո ப.-2 --- _ - டிசி