பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

வளையத்தை மாட்டிக் கொள்ளுமாறு எறிந்து ஆடி ம்கிழ்ந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. o

கோயட்ஸ் ஆட்டத்தில் இரும்பு வளையமாக இருந்து பிறகு ஆடுவதற்கு ஏற்றவாறு ரப்பர் வளையம் ஆனதை அறிந்துகொண்டோம். அது எவ்வாறு Ring Tennis அல்லது Tenikoit என்ற பெயரைப் பெற்றது என்பதை அறிவதற்கு நாம் கப்பலில் ஆடிய விளையாட்டுக்களைப் பற்றி அறிந்தால் தான் முடியும்.

கப்பல் விளையாட்டுக்கள்

கப்பலில் விளையாட்டுக்களா என்ருல் ஆமாம்! அவ்வாறு விளையாட வேண்டிய குழ்கிலே அக்காலத்தில் அமைந்திருந்தன என்ருல் நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

ஏறத்தாழ பல நூற்ருண்டுகளுக்கு முன்பிருந்தே, கடல்பயணம் செய்யும் வாய்ப்பு மனிதர்களுக்கு அதிகம் இருந்தது உண்மைதான். சரக்குகளே ஏற்றிச்செல்லும் கப்பல்கள், போரிடப் பயன்படும் கப்பல்கள், சரக்குகளுடன் மனிதர்களே ஏற்றிச்செல்லும் கப்பல்கள் என்று பல வகையான கப்பல் போக்கு வரத்துக்கள் அக்காலத்தில் இருந்தன.

க்ப்பலில் பயணம் என்ருல் அது ஓரிரு நாட்களில், முடிந்து விடக்கூடிய பயணமல்ல. வாரக்கணக்காக ஆக்லாம், அல்லது மாதக் கணக்காகக் கூட நீண்டு போய் விடுவதும் உண்டு. நாட்களின் எண்ணிக்கை ண்ேடு கொண்டே போகின்றன என்ருல், பயணத்தில் ஈடுபட்டிருப் பவர்க்ளுக்கு களைப்பாகவும் சலிப்பாகவும் இருந்து பயணத் ன்த்ய்ே வெறுக்கும் அளவுக்கு அமைந்திருந்தன.