பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.31

கப்பலில் உள்ள மேல்தளங்களில் அறிமுகப்படுத்தப் பட்டு. புகழ் பெற்ற ஆட்டங்கள் அனைத்தும், புதிதாக உண்டானவையல்ல. கடற்கரை ஓரங்களில், மணல்வெளிப் பகுதிகளில், கிராமப் புறங்களில் மக்களால் விரும்பி ஆடப் பட்ட ஆட்டங்கள்தாம் அவை. அவைகளில் மிக முக்கிய மானவை டென்னிஸ், கோயட்ஸ், கிரிக்கெட், கோல்ஃப் ஆகியவைகளாகும்.

இடமும் தடமும்

கப்பலில் கிடைத்த இடவசதிக்கேற்ப மேலே கூறிய ஆட்டங்கள் சுருங்கிக் கொண்டதாலும், விதிமுறைகளே மாற்றி அமைத்துக் கொண்டதாலும், அவைகள் புதிய பெயரைப் பெற்றன. அதாவது டெக் டென்னிஸ் (Deck Tennis); QLé Gémilit-sio (Deck Quoits); Quié àfláOst(Deck Cricket); QL& Gastróti (Deck Golf) arár so Quuir மாறின.

கப்பலில் ஆடப்பெற்ற ஆட்டங்களுக்கும் நமது டெனி கோய்ட் என்ற ஆட்டத்திற்கும் என்ன தொடர்பு இருக் கிறது? என்று ஆர்வத்துடன் நீங்கள் கேள்வியை எழுப்பலாம்.

இதுவரை கூறப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகள் எல்லாம் விளையாட்டு முறையில்ை ஆட்டம் அவ்வப்போது எப்படி புது வடிவம் பெற்றது என்பதையே சுட்டிக் காட்டிச் சென்றன. இனிமேல்தான், டெனிகோய்ட் என்ற வளையப் பந்தாட்டம் எவ்வாறு இந்த உருவினைப் பெற்றது என்ற அடிப்படைத் தன்மையை நம்மால் அறிந்து கொள்கின்ற வாய்ப்பினை நல்கும்.

- டெனி கோய்ட் ஆட்டமானது - டென்னிஸ் என்ற ஆட்டமும் கோயட்ஸ் என்ற ஆட்டமும் இரண்டறக் கலந்து