பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

بم ’ت .

ஒரு ஆட்டமாக உருவானது என்பது வரலாற்றுக் குறிப்பாகும்.

அப்படியால்ை, பங்தை மட்டையால் வலைக்கு இரு புறமும் மாறி மாறி அடித்தாடும் ஆட்டமான டென்னிசும், இரும்பு வளையத் தட்டு ஒன்றை எடுத்துக் குறிபார்த்து ஒரு இரும்பு முனைக்குள் மாட்டிக் கொள்ளுமாறு எறிந்தாடும் ஆட்டமான கோயட்சும் எப்படி இரண்டறக் கலந்திருக்க முடியும் என்ருல், அது தரையில் ஆடும்போது நேர்ந்த நிகழ்ச்சி அல்ல. கப்பலுக்குள் விளையாடும் ஆட்டமாக வந்த போதுதான் ஒன்ருேடு ஒன்று கலந்து விட்டது.

ஆதலால்தான், கப்பல் விளையாட்டுக்கள் எவ்வாறு வந்தன என்பதை இதுவரை விளக்கமாகக் கூற வேண்டி அமைந்து விட்டது.

கப்பலில் கோயட்ஸ்

இனி, தரையில் ஆடிய கோயட்ஸ் ஆட்டம், தண்ணிரில் மிதக்கும் கப்பலின் தளத்திற்கு ஆட்டமாக வந்த போது, எவ்வாறு ஆடப்பட்டது என்பதை முதலில் கவனிப்போம்.

கோயட்ஸ் ஆட்டத்திற்கு கின்று கொண்டு எறியும் ஒரு கோடும். கம்பு ஊன்றப்பட்டிருக்கும் ஓர் இடமும் தேவை என்பது உங்களுக்குத் தெரியும், கப்பல் மேல் தளத்தில் கோயட்ஸ் ஆட்டத்திற்கென்று தனியாகக் கோடுகளோ அல்லது குறியீடுகளோ (Marking) போட வேண்டும் என்ற அவசியம் இல்லாமலிருந்தது. ஏனென்ருல், கப்பலின் மேல் தளத்தில் செம்புத் தகடுகளே வைத்து இணைத்திருந்த ஒட்டுப் பகுதியானது கோடு போட்டது போல் அமைக் திருந்ததால், அதனையே ஆட்டக் கோடுகளாகவும் வைத்து பிரயாணிகள் ஆடினர்.

இன்னெரு வசதியும் கப்பலில் இருந்தது. கோயட்ஸ் ஆட்டத்தின் இரும்பு வளையத்தை, முளையாக விற்கும்