பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 33

இரும்புக் கம்பியில் மாட்டிக் கொள்ளுமாறு எறிவது என்பது எமக்குத்தெரியும். இங்கிலாந்து நாட்டில் சிறுவர்கள் கோயட்ஸ் ஆட்டத்தை கடற்கரை மணற் பகுதியில் ஆடும் போது, இரும்புத் தட்டுக்குப் பதிலாக. ரப்பர் வளையத்தை வேத்துக் கொண்டு எறிந்து ஆடினர். - a

கப்பல் மேல் தளத்தில் மரத்தாலான தரைப்பகுதியில் இரும்புத் தட்டை எடுத்து ஆடமுடியாது. அதுபோலவே. 'ரப்பரில் ஆன வளையத்தை எறிந்தும் ஆடமுடியாது. அது 'குதித்து ஓடிவிடுமேl ஆகவே, இரும்புத்தட்டு ரப்பராகியது 'போலவே ரப்பரிலிருந்து கயிற்ருல் சுற்றப்பட்டதொரு

வளையமாக அங்கே மாறியது (Rope Ring).

ஆடியவர்கள், கப்பல் மேல் தளத்திலுள்ள கொடிக் கம்பத்தின் அருகில் அமைந்துள்ள வட்ட வடிவப் பகுதி களில், கயிற்று வளையத்தை எறிந்து போடுவதையே, ஆட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டு ஆடினர். வட்டத்திற்குள் வளையத்தை எறிந்து, யார் முதலில் 21 வெற்றி எண்கள் எடுக்கிருரோ, அவரே வெற்றி பெற்றவர் என்று அறிவித்துக் கொண்டு ஆடினர்கள்.

அவர்கள் ஆடிய முறைகளில் இரண்டே இரண்டு 'குறிப்புக்களை மட்டும் நாம் கவனிப்போம்.

கையில் கயிற்று வளையம் வைத்திருப்பவர், வளையத் தைப் புன்புறமிருந்துதான் (BackHand) எறிய வேண்டும் என்பதும், அவ்வாறு எறியுவர் கோட்டிற்கு பின்புறத்தில், கின்றபடிதான் எறிய வேண்டும் என்பதும் மிகமுக்கியமான விதிகளாகும்.

கப்பலில் டென்னிஸ்

இனி, மட்டையால் அடித்தாடும் துள்ளடிப் பந்தாட்ட மாக விளங்கிய டென்னிஸ் ஆட்டம், கப்பல் டென்னிஸ்