பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

போல, 15, 30, 40, சாதக நிலை (Advantage) என்றே

அமைந்திருந்தது.

ஒரு முறை ஆட்டத்தை (Set) வெல்ல, 6 ஆட்டங்கள் -(Games) எடுக்க வேண்டியிருந்தது.

மேலே கூறிய விதிமுறைகள் டெக்டென்னிஸ் என்ற ஆட்டத்திற்கு உரியவை என்பது உங்களுக்குத் தெரியும்.

கடலில் மிதந்த கப்பல் மேல் தளத்தில் டெக் டென்னிசை ஆடி பொழுதைப் போக்கிய பிரயாணிகள், தங்கள் இல்லங்களே அடைந்ததும் பிரயாணத்தில் பெற்ற விளேயாட்டின்பத்தை மறந்தாரில்லை. அவர்கள் தாங்கள் தங்கியிருந்த பகுதிகளில், இதே விதிமுறைகளைக்கொண்டு, ஆடவும் ஆரம்பித்து விட்டார்கள்.

நீரின் மேலே கின் ருடிய ஆட்டமானது, நிலப் பகுதிக்கு வந்து விட்டது. கயிற்று வளையத்திற்குப் பதிலாக, ரப்பர் வளேயத்தை வைத்துக்கொண்டு, டென்னிஸ் ஆட்டம்போல ஆடியதால், இதனை ரிங் டென்னிஸ் (Ring Tennis) என்று அழைத்தனர். அதல்ைதான். இப்பொழுதும் இதனை "ரிங் டென்னிஸ் என்றே அழைக்கின்றனர், அழைக்கிருேம்.

கப்பல் மேல் தளத்தில் ஆடியதுபோலவே, கடற்கரை மணற் பரப்புகளில் ரப்பர் வளையத்தைக்கொண்டு, வலை இல்லாமலேயே டெக்டென்னிஸ் விதிமுறைகளைக்கொண்டு ஆடி மகிழ்ந்தனர் சிலர். அவர்கள் இதனை பீச் டென்னிஸ் *(Beach Tennis) arch so scopéârq-orir. -

டென்னிஸ் ஆட்டத்திலிருந்த முக்கிய விதிகளை வேண்டு மேளவுக்கு விரும்பிய அளவில் மாற்றி ஏற்றுக்கொண்டு, ஆடுகள அமைப்பு. வலைபோன்ற சாதனங்களையும் உப யோகித்துக்கொண்டு, பந்துக்குப் பதிலாக கோயட்ஸ் அல்லது ரப்பர் வளையத்தைப் பயன்படுத்தி ஒரு Լ| 5/ ஆட்டமாக உருவாக்கி ஆடியதால், இதனை டென்னிகோய்ட்