பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘. .40

(இதற்கு முன்பிருந்த விதியில், முதல் முறை ஆடடத் தில் (Set) வ்ெற்றி பெறுகிற குழுவே, அடுத்த முறை ஆட்டத்திலும் முதலில் வளையம்,எறிந்தாடி வழங்குகின் n (Service) வாய்ப்ப்ைப் பெறுகிறது என்று இருந்தது.)

3. வெற்றி எண்கள் பெறும் முறை (Points)

1. ஒற்றையர் போட்டியாக இருந்தாலும் சரி, இரட டையர் போட்டி ஆட்டமாக இருந்தாலும் சரி, ஒரு முறை ஆட்டத்தில் (Game) வெற்றி பெற 21 வெற்றி எண்கள் எடுக்க வேண்டும். -

(முந்தைய விதியில் கைப்பந்தாட்டத்தில் உள்ள வெற்றி எண்முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் 15 வெற்றி, எண்கள் எடுத்தால் போதும்.)

2. 21 வெற்றி எண்களே எடுப்பதானது, மேசைப் பந்தாட்டத்தில் வெற்றி எண் பெறுவதுபோல எடுக்க வேண்டும். -

மேசைப் பந்தாட்டத்தில் வெற்றி எண் பெறும் ஆட்ட முறையைப் பற்றிய விளக்கம் கீழே தரப்பட்டிருக்கிறது.

கைப் பந்தாட்டத்தில் வெற்றி எண் பெறும் முறை யானது, ஒரு குழு முதலில் பங்தை அடித்தாடி வழங்கிய (Service) பிறகு, எதிர்க்குழு அந்தப் பங்தை முறையாக ஆடாது தவறிழைத்தால், அடித்தாடிய குழு 1 வெற்றி எண் பெறும்.

எதிர்க் குழு பந்தை சரியாக அடித்தாடி. பந்தை அடித் தாடி வழங்கிய குழு (Serving Side) தவறிழைத்து விட்டால், பந்தை அடித்தர்டும் வாய்ப்பு. எதிர்க் குழுவிற்குப்போய்ச் சேரும். . . . . . . .