பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

உங்கள் வெற்றி எண் பட்டியலில், உங்கள் எதிராட்டக் காரரைவிட 1 வெற்றி எண் குறைந்து போகின்றீர்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். -

9. நீங்கள் எந்த இடத்தில் ன்ேறு, எந்த ரிலையில் வளே யத்தைப் பிடித்தாலும் சரி, அதனைப் பற்றிக் கவலையே இல்லை. ஆல்ை, வளையத்தைப் பிடித்தவுடனே எதிர்க் குழு பகுதிக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானதாகும். இல்லையேல் தாமதப்படுத்தினிர்கள் என்ற தவறுக்காளாகி விடுகின்றீர்கள்.

10. வலைக்கு இருபுறமும் 3 அடி பரப்பிற்குள்ளே (மொத்தம் இருபுறமும் 6 அடியாகும்) இருப்பது பொதுத் தரையாகும். (Neutral Ground). அந்தப் பொதுத் தரை யில் எக்காரணத்தை முன்னிட்டும் உங்கள் கால் படக் கூடாது. படாமல் ஆடவேண்டும்.

11. வளையம் விழுந்தவுடன் எங்கு போய் கிடக்கிறது எனபதைப்பற்றி சிந்திக்கக்கூடாது. முதலில் கீழே எந்த இடத்தில் விழுந்தது என்பதைத்தான் பார்க்க வேண்டும். வளையம் இந்தக் கோட்டில் விழுந்தாலும் சரி, அல்லது தொட்டாலும் சரி அது ஆடுகளத்தில் விழுந்ததென்றே காக தப்படும். அதனை ஏற்றுக்கொண்டுதான் ஆடவேண்டும்.

12. கின்றபடி, கையைப் பின்புறமாகக் கொண்டு சென்று, எறிந்து வழங்குவது' (Service) (அதாவது வலது கால் முன்புறமாக இருக்கும் வண்ணம்) சந்தேகத்திற் சில்லாதபடி சிறப்பான ஒன்ருகும்.

13. ஆடுகளப் பகுதியின் கடைசியில் இருந்துகொண்டு

ஆடும்பொழுது, முன்புறமாகவே கையைக் கொண்டுவந்து வளையத்தை எறிந்து ஆடுவது சிறப்பான ஆட்ட முறை யாகும்.