பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


ஒருபொழுது வாழ்வதறியார் கருதுப கோடியும் அல்ல பல என்பது குறள். ஆக, நாம் எண்ணங்களைக் கோடிக் கணக்கில் எண்ணு கிறோம். எழுத்துக்களை இலட்சக்கணக்கில் எழுது கிறோம். பேச்சுக்களை ஆயிரக்கணக்கில் பேசுகிறோம். கொள்கைகளை நூற்றுக் கணக்கில் கூறுகிறோம். திட்டம் களைப் பத்துக் கணக்கில் வகுக்கிறோம். ஆனால் செயலில் ஒன்றையாவது உருவாகச் செய்வதில்லை. வள்ளலாரோ பல செயல்களை, அதுவும் செயற்கருஞ் செயல்களைச் செய்து முடித்தவர். சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை, சத்திய ஞான சமரச சன்மார்க்க சங்கம், இம் மூன்றையும் தோற்றுவித்து, செவ்வையாக நடத்தி, என்றும் நின்று நிலவச் செய்திருப்பது அவர் செய்த செயற்கருஞ் செயல் களாகும். - யார் பெரியர், என்ற கேள்விக்கு வள்ளுவர் கூறுகிற விடை "பணத்தரல்லர், நிலத்தரல்லர், எழுத்தரல்லர், பேச்சரல்லர், வயது முதிர்ந்த கிழவர்களும் அல்லர். பிறராலே செய்தற்கரிய காரியங்களைச் செய்பவரே பெரியர்' என்பது. இதனை செயற்கரிய செய்வர் பெரியர்" என்ற குறளால் அறிய முடிகிறது. அத்தகைய Quifluff “sugits ramif”. 11. சித்த மருத்துவர் & ‘. ... சித்தர் வேறு, முத்தர் வேறு. சித்தி அடைந்தவரி சித்தர், முத்தி அடைந்தவா முத்தர். - சித்தி ബജു ിഞ്ഞ சேர்ந்த அனுபவம் இ முத்திஎன்பது கிலை முன்னுறு சாதனம் என வள்ளலாரே கூறியுள்ளார்.