பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

. கிறது. இவற்றைப் பொன் வடிவம் தனையடைந்து களித் தேன்' என்ற அவரது வாக்கும், "பொன்னுடம்பு எனக் குப் பொருந்திடும் பொருட்டு என்னுளம் கலந்த என் தனி யன்பே' என்று அவர் இறைவனை நினைந்து உருகிப் பாடிய பாடலும் மெய்ப்பிக்கின்றன. 12. வியப்புக்குரியவை 1. ஓராண்டுப் பருவத்திலே தில்லையில் திரை தூக்கத் தரிசித்தது. - 2. திண்ணையிலிருந்து புரண்டு கீழே விழுந்தபோது விழாமல் தடுத்து இறைவி காப்பாற்றியது. 3. ஐந்து வயதில் பள்ளிக்குச் சென்றும் படிப்பில் கவனமில்லாது இறை நினைவே கொண்டிருந்தது. 4. ஒன்பது வயதில் அவரது ஆசிரியர். ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம், மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம், வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் என உலக நீதியைச் சொல்லக் சொல்லியும் இவர் சொல்லா திருந்தார். ஏன் சொல்லவில்லை?" என்று ஆசிரியர் கேட்டபோது, 'இறைவனிடத்திலே வே ண் டாம் வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருப்பானேன். 'ஏதாவது வேண்டும், வேண்டும்' என்று எதை வேண்ட லாம் என எண்ணிக் கொண்டிருந்தேன்' என்றார். "நீ வேண்டுமானால் வேண்டும் வேண்டும் எனப்பாடு' என்று ஆசிரியர் கட்டளையிட உடனே 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்ற பாடலைப் பாடியது.