பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17

 இலக்கியங்களில் தேடியும் என் கண்களுக்குப் புலப்படவில்லை,

வள்ளற் பெருமான், திருஞான சம்பந்தரை வழிபடு குருவாகக் கொண்டார் என அறிந்தேன். அவரிடம் கிடைக்குமா என ஆராய்கிறேன். சம்பந்தருக்கு வயது மூன்று. சீர்காழியில் குளத்தருகில் பாலுண்ட வாயோடு காட்சியளித்தார். தந்தை சிவபாத இருதயர் பிரம்பெடுத்து வந்து, யார் பால் கொடுத்தது?" என்று அதட்டிக் கேட்டார். அதற்குச் சம்பந்தர் 'பெம்மான்' என்றார். எந்தப் பெம்மான்? பிரமாபுரம் மேவிய பெம்மான். எந்தப் பிரமாபுரம்? 'பெருநெறிய பிரமாபுரம்' என்றார். இங்கு அகப்பட்டுக்கொண்டது பெருநெறி. அங்கே பூட்டியிருந்த பூட்டுக்கு இங்கு சாவி கிடைத்தது போன்றிருந்தது. அது மட்டுமல்ல, பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான்' என்ற சொற்றொடர், இறைவனையும் அவன் கோயில் கொண்ட சீர்காழியையும், அந்தச் சீர்காழி நகரத்திலுள்ள சான்றோர்களின் நெறியையும் விளக்கியது. அப் பொழுது தெய்வமணிமாலைக்குத் திரும்பி வந்து, அங்குள்ள பெரு நெறியைப் பார்த்தால் வெறும் பெருநெறி என்றில்லை, 'பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும்' என்றிருப்பது புரிந்தது.

மற்ற நெறிகளெல்லாம் பிறர் கொடுக்க வேண்டும் என்பதாகவும், இந்தப் பெருநெறி மட்டும் பிறர் கொடுத்துப் பெறுவதல்ல; "தானே பிடித்து ஒழுக வேண்டிய ஒன்று' என்றும் விளங்கிற்று.

இதிலிருந்து பெருநெறி என்பது எல்லா நெறிகளிலும் உயர்ந்த நெறி என்பதும், அது சான்றோர்களால் கையாளப் பெற்ற-கையாளப்படுகின்ற நெறி என்பதும், அது அன்பு

வ.-2வ.-2