பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


நெறி, அருள்நெறி, கருணைநெறி ஆகிய மூன்று நெறி களாலும் பின்னப்பட்ட ஒரு பெருநெறி எனவும் விளங் கிற்று. அன்பு நெறி, அருள் நெறி. கருணைநெறி ஆகிய இம் மூன்றும் மனமிளகிய நிலையையே காட்டுவன. எனினும் அவை ஒன்றல்ல. "அன்பு சிறியவர் பெரியவரிடத்தில் காட்டுவது. 'அருள்' பெரியவர் சிறியவரிடத்தில் காட்டுவது. 'கருணை' தன்னை ஒத்தவரிடத்திற் காட்டு வது எனலாம். இனி அன்பு மேல்நோக்கிச் செல்வது, அருள் கீழ் நோக்கி வருவது, கருணை சமவழியில் நடப்பது எனவும் கூறலாம். இவ்வுண்மைகளை, “அன்பைச் செலுத்தல்' என்பதனாலும், "அருளைப் பொழிதல்' என்பதனாலும், கருணை காட்டுதல்" என்பதனாலும் நன்கறியலாம், இம் மூன்றையும் கண்டு கையாண்டு நமக்கும் நடத்திக் காட்டி மகிழ்ந்தவர் வள்ளலார். (அ) அன்பு நெறி 1. இதைப் பத்தி நெறி எனவும் கூறுவர். இதற்கு வள்ளலார் இலக்கணம் கூறும்பொழுது, இறைவனை ஒரு 'மலை’ என்கிறார். அதைப் பார்த்து எவரும் பயந்து விட வேண்டியதில்லை. அம்மலை 'அன்பு என்ற கைப்பிடிக்குள் அடங்கிவிடும்' என்கிறார். அடுத்து இறைவனைக் 'கடல்’ என்கிறார். அதைக் கண்டு எவரும் பீதி அடைய வேண்டிய தில்லை. அக்கடல் 'அன்பு என்ற குடத்துக்குள் அடங்கி விடக்கூடியது என்கிறார். அடுத்து இறைவனை 'இவ்வுலகம் முழுவதும் நிரம்பியுள்ள ஒரு பரம்பொருள்' என்கிறார். இதைக்கண்டு எவரும் கலக்கமடைய வேண்டியதில்லை. அப் பரம்பொருள் "அன்பு எனும் வலைக்குள்' அகப்பட்டு விடும் என்று கூறுகிறார். இதிலிருந்து வெளியைவிட,