பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


மலையை விட கடலை விட அன்பு பெரியது என்று தெரி கிறது. இறுதியில் இறைவனே அன்பு உருவானவன்” என்று 'அன்புருவாம் பரமசிவமே' என முடிக்கிறார். 2. இதனைத் திருமூலரும் 'அன்பும் சிவமும் இரண் டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது யாரும் அறிகிலார், அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின், அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே எனக் கூறியிருப்பதாலும் நன்கறியலாம். 3. இனி மக்களாய்ப் பிறந்தவர்கள் இறைவனிடத்தில் அன்பு செலுத்தியாக வேண்டும் என்பதற்காக, இறைவன் எத்தகையவன் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். 'கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பு' என்பது அவரது வாக்கு. இறைவன் கற்றவர்க்கு மட்டு மல்ல, சிறிதும் கல்லாதவர்க்கும் மகிழ்ச்சியைத் தருபவன், ஏன்? அவன் மகிழ்ச்சியே உருவானவன் என்கிறார். 4 அடுத்து ‘காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக் கும் கண் என்பது அவரது வாக்கு. கண் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, கண் இல்லாதவர்களுக்கும் கண் அளிப்பவன் இறைவன், காரணம் எல்லா உயிர்களுக்கும் இறைவன் கண்ணாகவே இருப்பவன் என்பது அவர் கருத்து இதில் ஒன்று கண் இல்லாதவர்களுக்கு கண்கொடுப்பது புரிகிறது. கண் உள்ளவர்களுக்கும் அவன் கண்கொடுப்பது என்றால் அது எப்படி? அது ஆராய வேண்டிய ஒன்று. ஆராய்ந்தால், அது ஊனக் கண்ணிலும் உயர்ந்த ஞானக் கண் என்பது புலப்படும். (ஆ) அருள் கெறி 1. வள்ளலார் வாடிய பயிரைக் கண்ட போதெல் லாம் வாடினேன்' என்கிறார். இதனால் உயிர்கள் வாடு வது மட்டுமல்ல, பயிர்கள் வாடியதைக் கண்டும் அவர்