பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


வாடியிருக்கிறார் என்று தெரிகிறது. இது அருள் நெறியில் மிக உயர்ந்த நெறி. இதில் 'கண்ட போதெல்லாம்' என்ற ஒரு சொற்றொடர் இருக்கிறது. இது வள்ளலார் ஒரு பயிரை வாடியிருக்கும் போது கண்டிருக்கிறார்; கண்டு வருந்தியிருக்கிறார்; மறுபடியும் உழவன் தண்ணீர் இறைத்து அப் பயிர் செழித்து நிற்பதைக் கண்டு மகிழ்ந் திருக்கிறார்; அடுத்து ஒரு நாள் அதே பயிர் வாடியிருப் பதைக் கண்டு வருந்தியிருக்கிறார் என்ற நிகழ்ச்சிகளையெல் லாம், கண்ட போதெல்லாம்' என்ற சொற்றொடர் அ றிவிக்கிறது. 2. வள்ளலார் உடம்பு ஒரு முறை இளைத்திருந்தது. அன்பர்கள் காரணம் கேட்டபோது, "நான் வருகின்ற வழியில் நடந்து சென்ற மக்களில் பலபேர் இளைத்திருந் ததைக் கண்டேன், அதனால் என் உடம்பு இளைத்து விட்டது போலும் என்றார். இது எவ்வளவு பெரிய அருள் நெறி! 3. மற்றொரு தடவை வள்ளலாருடைய புருவம் துடித்தது. இதைக் கண்டதும், யாருக்கோ எவருக்கோ துன்பம் வரப் போகிறது, அதைக் கண்டு நான் துடிக்கப் போகிறேன் என்பதை இது துடிதுடித்துக் காட்டுகிறது' என்று கூறியிருக்கிறார். இந்த உயர்ந்த அருள்நெறியை நம்மால் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு உயர்ந்து நிற்கிறது.இந்த அருள் நெறி. 4. வள்ளலார் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சொத்து ஒன்றும் இல்லாதவர். வருமானமும் இல்லாதவர். இவரின் இந்த நிலைகண்டு தமையன் கடிந்ததால்குடும்பத் தின் ஆதரவையும் இழந்தார். தமையனார் இவருக்கு வீட்டில் சோறு போடக்கூடாது என்று கட்டளை இட்டி