பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


ருந்ததால், பசிக்கு உணவு கிடைக்காமல் வருந்தியவர். எவரிடத்திலும் சென்று இரந்ததில்லை. எதுவும் ஏற்ற தில்லை. அவர் வாழ்க்கையில் பலகாலும் பசித்திருந்து լացH** மக்களை எப்படி வருத்தும் என்பதை அவர் உணர்ந்திருக் கிறார். அதன் விளைவே, "சத்திய தருமச் சாலையை'த் தோற்றியதும், மக்களின் பசிப் பிணியைப் போக்கும் செயற் கருஞ்செயலைச் செய்திருப்பதும் என உணரலாம். (இ) கருணைநெறி 1. உலகில் உள்ள எல்லா நாட்டினரிடத்தும், எல்லா மதத்தினரிடத்தும், எல்லா மொழியினரிடத்தும் மட்டு மல்ல, எல்லா உயிர்களிடத்தும் காட்டுவதே 'கருணை நெறி' ஆகும். இதற்கு உயிரிரக்கம்" என்று பெயர். இதை ஜீவகாருண்யம் என்பர். வள்ளலார் கூறியிருக்கிற கருணை நெறியிலும், ஒருமைப்பாட்டிலும் மக்கள் மட்டு மல்ல, மற்ற எல்லா உயிர்களும் அடங்கியிருக்கின்றன. 2. "ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன்னி னிதே' என்று இனியவை நாற்பது கூறுகிறது. :தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிதுஊன் உண்ணற்க' என்பது வள்ளுவர் கருத்து. இதற்குமேல் வள்ள் ற்பெருமான், மக்கி ளாய்ப் பிறந்தவர்கள் எல்லா உயிர்களிடத்தும் கருன்ை காட்டி. ஆகவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். 3. நான் 50 ஆண்டுகட்கு முன் மூன்று சொற்றொடர் களை எழுதியிருந்தேன். 'தன்னைத் தானே காப்பாற் றிக் கொள்ளத் தெரியாத மனிதர்கள், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உருவங்களுக்கு: தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உயிரி