பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


களைப் பலிகொடுக்கிறார்கள்” என்பது. பொருள் விளங்கி யிருக்கும் என நம்புகிறேன். தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்த மனிதர்களாக இருந்தால், தங்களுக்கு வந்திருக்கும் நோய் என்ன? அது எப்படி வந்தது? அதை எப்படிப் போக்குவது? என்ன மருந்து சாப்பிடுவது? என்று தெரிந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். அப்படிக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமையால்தான், சில உருவங்கள் தங்க ளைக் காப்பாற்றும் என நினைத்து அதனிடம் போகிறார்கள். அந்த உருவங்களும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதவை. காப்பாற்றிக் கொள்ளத் தெரிந் தால் அவைகள் நேராக ஆட்டு மந்தைகளுக்கும் கோழிப் பண்ணைகளுக்கும் சென்று பசியாறக் கடித்துத் தின்று திரும்பி வரும். அதனால் எப்படி வெளியே போக முடியும்? பூசாரிதான் உள்ளே வைத்துப் பூட்டி விடுகிறானே! எவனா வது ஏமாந்தவன் எதையாகிலும் கொண்டு வந்து பலி' கொடுக்க மாட்டானா என்று, அவை உட்கார்ந்திருந்த இடத்திலேயே ஏங்கிக் கொண்டிருக்கும். அதனால் அது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாது. . இனி பலி கொடுக்கப்படும் உயிர்கள். அவைகளும் தங் களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள முடியாதவை. மனிதன் அவைகளை வெட்டும் போதும் அறுக்கும்போதும் "கீச்ச்ே சென்று அலறி அழுது மடிவதைத் தவிர, அவை களால் வேறொன்றும் செய்ய இயலாது. கரடி, புலி, சிறுத்தை, சிங்கம் முதலியன தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவை. அவைகளைக்