பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


வதற்குரிய பக்குவம் இல்லை என்பதை உணர்ந்து, அவனுக்கு உரிய வழியைக் காட்டவேண்டும் என உணர்ந்து, 'தம்பி உன்னால் ஒரு பெருந்தவத்தைச் செய்ய முடியுமா?’ என்று கேட்டார். அவன் என்னால் முடியும் என வாக்களித்தான். அதன்பிறகு அவனுக்குரிய பெருந்தவத்தை இவ்வாறு கூறினார்: "அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணு. அரும் பசி எவருக்கும் ஆற்று. மனத்துள்ளே பேதா பேதம், வஞ்சம், பொய், களவு, சூது, சினம் இவற்றையும் தவிர்ப்பாயாகில் செய்தவம் வேறொன்றுண்டே' இதுவே 'பெருந்தவம்' எனப் போதித்தார். இத்தவத்தில் மூன்று நெறிகள் உள்ளன. ஒன்று அனைத்துயிர்களும் ஒன்று என்று எண்ணுவது; மற்றொன்று அரும்பசி எவருக்கும் ஆற்றுவது; இன்னொன்று மனத்தைத் தூய்மைப் படுத்துவது. இம் மூன்றுமே "கருணை நெறி" களாகும். - 6. வட நாட்டிலிருந்து ஜைன சமயத் தலைவர் 'அனுவிரதி ஆச்சார்யா துளசி” அவர்கள் தென் னாட்டிற்கு வந்த போது, என் இல்லத்திற்கும் வந்திருந் தார். என் நூல் நிலையத்தையும் பார்த்தார். அதில் இராமலிங்க அடிகளின் அருட்பாவை எடுத்து, அதிலுள்ள சில பாடல்களைப் படித்துக் காட்டினேன். 'வாடிய பயிரைக் கண்டு அவர் வாடியதையும் இளைத்தவர் தமைக் கண்டு இளைத்ததையும், பிறர் துயர் கண்டு துடித்ததை யும் அறிந்து, அவர் துடிதுடித்துப் போனார். அதோடு 'தென்னாட்டில் இத்தகைய ஜீவகாருண்யம் படைத்த சான்றோர்கள் இருந்தனாா?” என்று வியந்தும் கேட்டார். மேலும் சில கருத்துக்களை அவருக்கு விளக்கிக் காட்டிய போது, அவர் சொன்ன சொற்கள் இவை: "நான் வட நாட்டில் இருந்து தென்னாட்டிற்கு வந்து மக்களுக்குக்