பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


கருணை நெறியைப் பரப்பலாம் என வந்தேன். இப்போது இன்னும் இங்கு உள்ள கருணை நெறிகளை அறிந்து, அவைகளைக் கொண்டுபோய் வடநாட்டில் பரப்பவேண்டும் என எண்ணுகிறேன்’ என்பதே. 7. வள்ளலாருடைய கருணை நெறிகளில் ஒன்று 'எல்லா மக்களும் தங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பேராசைகளையும் பேதங்களையும் ஒழித்து" சன்மார்க்க நெறிநின்று இறைவனை அடைய வேண்டும் என்பது. அதற்காக வள்ளலார் பேதை மக்களைப் பார்த்து வருந்தி, அவர்கள் நிலையைத் தன்மேல் ஏற்றித், தானே பேதையானேன், அதுவும் வெறும்பேதையல்ல, பேயேறி நலிகின்ற பேதையானேன்' என்கிறார். அப்படி ஆனது எதனால் என்பதற்குக் காரணமும் கூறுகின்றார், 'பித்தேறி அலைகின்ற மனத்தினாலே பேயேறி நவிகின்ற பேதை யானேன்' என்று. எந்தெந்தப் பித்துகள் மனத்திலே ஏறின என்பதை விளக்கியும் காட்டுகிறார். வஞ்சக வாழ்க்கை ஏறி, மயக்கம் ஏறி, பேராசை ஏறி, மதநெறி ஏறி, அதனாலே பித்து ஏறியது என்று. அந்தப் பித்து எப்படி மனதை அலைக்கழிக்கிறது என்பதற்கு ஒரு உவமை காட்டுவதுதான் நமக்குப் பெரும் வியப்பைத் தருகிறது. நாம் ஏறுகிற பொருட்கள் எனச் சில உள்ளன. அவை கப்பல், மாடிப்படி முதலியன: அவை நம் மேல் ஏறுவதில்லை. நம்மேல் ஏறுகின்ற சில பொருட்கள் உள்ளன. அவை ஆடை, அணிகலன்கள். அவற்றின் மேல் நாம் ஏறுவதில்லை. ஆனால் இரு பொருட்கள் ஒன்றின்மேல் ஒன்று ஏறுகின்றன. அவை, மத்தும் தயிரும். --- *