பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


மத்தின் மேல் தயிர் ஏறி, தயிரின் மேல் மத்து ஏறி 'சர்-சர்' என்று அலைக்கழிப்பதுபோல இந்தப் பித்து என மனத்தின் மேல் ஏறி, மனம் அதன்மேல் ஏறி நான் அலைக்கழிக்கப் படுகிறேன் என வருந்துகிறார். இது அவர் நிலையை அல்ல, நம்நிலையை எண்ணியே கூறியிருப்பதாகும். பாடலும் இது தான்: மத்தேறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை மயலேறி விருப்பேறி மதத்தினோடு பித்தேறி அலைகின்ற மனத்தினாலே பேயேறி கலிகின்ற பேதையானேன் என்பது. முடிவுரை ஆக மூன்று புரிகளைக் கொண்டு முறுக்கப்பெற்ற ஒரு வடக்கயிறு போன்றதுதான் அன்பு நெறி, அருள் நெறி, கருணை நெறி ஆகிய மூன்று நெறிகளையும் பின்னிக் கொண்டிருக்கின்ற ஒரு நெறி. அதுவே பெரு நெறி எனக் கொள்ள வேண்டியிருக்கிறது. . மற்றொரு வகையில் நெறி என்றால் வழி. பெரு நெறி என்றால் உயர்ந்தவழி, நல்ல வழி என்றாகும். இதனுடைய நேரான மொழி பெயர்ப்பே சன்மார்க்கம் (மார்க்கம்-வழி). இதைக்கண்ட பெருமகன் வள்ளலார். இதுகாறும் கூறியவற்றால் வள்ளலாரது வரலாற்றை யும், அவர் கண்ட நெறியையும் ஒருவாறு அறியலாம். நாளைய தினம் அவருடைய 'அருட்பா'வைப் பற்றி ஆராய்வோம்.