பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


3. கோவை பல. தஞ்சை வாணன் கோவை, திரு வெங்கைக் கோவை, திருவாரூர்க் கோவை என்பவை. ஆனால், திருசேர்ந்த கோவை ஒன்றே ஒன்று; அது திருக் கோவை. 4. குறள்களும் பல. அவை ஒளவைக் குறள் முதலி யன. ஆனால் திரு சேர்ந்த குறள் ஒன்றே ஒன்று; அது திருக்குறள். 5. அருட்பாக்களும் பல. அருளாளர்கள் பாடிய பாக்கள் அனைத்தும் அருட்பாக்களே. ஆனால் திரு சேர்ந்த அருட்பா ஒன்றே ஒன்று; அது திருவருட்யா. 3. திரு அருட்பா ஆறு திருமுறைகள், அதாவது ஆறு பகுதிகள், 399 பதிகங்கள், 5818 பாடல்கள். - இதில் அருட்சோதி அகவல் ஒரு மலை போன்றது. அதன் ஒவ்வொரு அடியும் அதன் படிகளைப் போன்றவை. இவையே அருட்பாவின் அமைப்பு, இறைவனை முன்னி றுத்தி 5818 பாடல்களைப் பாடிய ஒரே புலவன், ஒரே துறவி, ஒரே ஞானி, வள்ளலார். 4. இறைவனைக் கண்டது - உலகில் உள்ள அறிஞர்களும் ஞானிகளும் இறைவனைத் தேடித் தேடி அலைகிறார்கள். ஆனால் வள்ளலார் உள்ளம் ஒன்றுதான் இறைவனது இருப்பிடத்தைத் தேடி, அது மனிதரது உள்ளம் என்று கண்டு ஆனந்தக் கூத்தாடி யது. - - w இக்கருத்தை அருட்பாவில் உள்ள ஒரு பாடல் மிக அருமையாக முழங்கிக் கொண்டிருக்கிறது. அது,