பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


நீ காத்தருள் என்று இறைவனை வேண்டுகிறார். அப் பாடல், வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனை கவர் கருத்தினேன் ஓட்டைச் சட்டியே எனினும் பிறர் கொளத் தரியேன் தயவிலேன் சூதெலாம் அடைந்த பெட்டியே நிகர்த்த மனத்தினேன் -உலகில் பெரியவர் மனம் வெறுக்கச் செய் எட்டியே மண்ணாங் கட்டியே யனையேன் என்னினும் காத்தருள் எனையே 8. திறந்த உள்ளம் அடுத்து ஒரு பாடல் இறக்கவும் ஆசையில்லை. இப்படி நான் இருக்கவும் ஆசையில்லை, இனி நான் பிறக் கவும் ஆசையில்லை, பெரியவர் பெரியவர் என்று சிறக்கவும் ஆசையில்லை, விசித்திரங்கள் செய்யவும் ஆசையில்லை, துறக்கவும் ஆசையில்லை, துயரடைந்து துரங்கவும் ஆசை ஒன்றிலை' என்று. வள்ளலார் பிள்ளைச் சிறு விண்ணப்பத் தில், தன் உள்ளத்தைத் திறந்து காட்டுவது, தம் உள்ளத்தை யெல்லாம் சுடுகிறது. - 9. மரணமிலாப் பெருவாழ்வு அருட்பாவில் மிக உயர்ந்து நிற்கின்ற பாடல் ஒன்று, அது. நினைந்து கினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து கிறைந்து ஊற்றெழுங்கண்ணிரதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே கன்னிதியே ஞான