பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


கடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலிர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டிர், புனைந்துரையேன் பொய்புகலேன், சத்தியம் சொல்கின்றேன் என்பது. இப்பாடல் மூலம் வள்ளலார் தாம் பெற்ற பெரும் பேற்றைப் பெற உலக மக்களையெல்லாம் அழைக்கின்ற அந்தப் பேரன்பு, நம்மையும் நினைக்கச் செய்து, உணரச் செய்து, நம் உள்ளத்தையும் நெகிழச் செய்கிறது. 10. பட்ட பாடு திருவருள் முறையீடு என்ற பகுதியில், நான் படும் பாடு சிவனே உலகில் கவிலும் பஞ்சுதான் படுமோ சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ? என்ற பாடலும் - 'பட முடியாதினித் துயரம், பட்டதெல்லாம் போதும்” என்று இறைவனிடம் முறையிடும் பாடலும், அவர் இவ் வுலகில் பட்ட பாடுகளையெல்லாம் நமக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. 11. உடலை எரித்தல் உயிர் பிரிந்த பிறகு உடலை எரிப்பதை மனம் வருந்திக் கண்டிக்கிறார். அதைப் பின்வரும் பாடலால் அறிய முடிகிறது. அணங் கெழுபேர் ஓசையொடும் பறையோசை பொங்கக் கோரணி கொண்டந்தோ பிணங்கழுவி எடுத்துப் போய்ச் சுடுகின்றீர் இனிச் சாகும் பிணங்களே நீர். 3 ماسه ,uه