பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


இறைவனையே நோக்கி 'இறைவா நான் உன் அடி யார் பரம்பரையில் தோன்றியவன் அல்லவா?' என்று உரிமைக் குரல் எழுப்புகின்ற அவரது வாக்கு இது. 2. வாழையடி வாழையென வந்த மரபு இச் சொற்றொடரில் மரபு என்ற ஒரு சொல் இருக் கிறது. அந்த மரபு எது என்று ஆராய வேண்டும். இறுதிக் காலத்தில் தோன்றிய ஞானிகள் மூவர். அவர்கள் பட்டினத் தாரி, தாயுமானவர், இராமலிங்க அடிகள். இம் மூவரும் துறவி, ஞானி, புலவர் என்றாவர். இம் முறையில் பார்த்தால் இராமலிங்க அடிகளுக்கு முந்திய மரபு தாயுமானவர் என்று தெரிகிறது. தாயுமான வருக்கு முந்திய மரபு எது? தாயுமானவர் வாக்கிலிருந்தே இதைக் கண்டு பிடிக்க வேண்டும் அல்லவா? அவருடைய குரு மெளனகுரு. திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டையி இலுள்ள மெளன மடத்தில் வாழ்ந்தவர். தாயுமானவர் அவருக்கு வணக்கம் செலுத்தும்பொழுது, ‘மந்திர குருவே யோக தந்திர குருவே, மூலர் மரபில் வரு மெளனகுருவே' என்று வணக்கம் செலுத்தியிருக்கிறார். இதிலிருந்து இந்த மரபுக்கு மூலம் மூலர்; அவர் திருமூலர் என்று தெரிகிறது. ஆக, இப்பொழுது நமக்கு ஒரு மரபு கிடைத்து விட்டது. முதலில் திருமூலர், பிறகு சித்தர்கள், அடுத்து தொல்காப்பியர், திருவள்ளுவர், பிறகு சமயசாரியர்கள், சந்தானாசாரியர், நாயன்மார், பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்க அடிகள் எனக் கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தனை பேரும் திருமூலர் மரபையே சார்ந்திருக் கிறார்கள். அந்த மரபைவிட்டு மாறவில்லை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள்;