பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


போற்றி” என்று இறைவனது திருவடிகளையும் குறிப்பிட்டுப் போற்றியிருக்கிறார். (ஈ) இந்த மரபில் வந்த திருநாவுக்கரசரை, சமணர்கள் நீற்றறையில் வைத்துப் பூட்டி, 'இந்நேரம் அவர் எலும்பும் சாம்பலுமாகியிருப்பார்' என்று எண்ணிக் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் உயிரோடு வெளியில் வந்தார். அங்கி ருந்தோர் எப்படி உயிர் பிழைத்தீர்கள்” என்று கேட்ட தற்கு, "என்னை இறைவனது திருவடி நிழலில் வைத்திருந் தேன், அந்த இறையடி நீழல் என்னைக் குளிரச் செய்தது, தகிக்கவில்லை" என்றே கூறினார். எப்படி திருவடி? (உ) அடுத்து திருஞானசம்பந்தர். திருவாவடுதுறைப் பதிகத்தில் -இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன் கழல் தொழுதெழு வேன்' என்றும், 'வாழினும் சாவினும் வருந்தினும் போய் விழினும் உன் கழல் விடுவேன் அல்லேன்' என்றும், இறைவனது திருவடியையே உறுதியாகப் பற்றியிருப் பதாகக் கூறியிருக்கிறார். (ஊ) சுந்தர மூர்த்தி சுவாமிகளும் மற்றுப்பற்றெனக் கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்' என்றும் "தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்கி, "அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க் கும் அடியேன்” என்று கூறித் திருவடியையே பற்றி முடித் திருக்கிறார். - இந்த மரபைப் பின்பற்றியே, வள்ளலார் அவர் சளும் திருவடிப்புகழ்ச்சி” என்ற ஒரு பெரும்பாடலை மூன்றாந் திருமுறையிய் முதல் பாடலாகப் பாடியே தொடங்கியிருக்கிறார். அது மட்டுமல்ல, திருவடிப் பெருமை என ஆறாம் திருமுறையில் 45 பாடல்களையும் பாடியிருக்கின்றார்.