பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


சாதி, மதம், சமயம் எனும் சங்கடம்' என்றும் "சாதியிலே, மதங்கவிலே, சாத்திரக் குப்பைகளிலே' என்றும், சாதி, குலம், சமய வேற்றுமைகளைக் கண்டித்த பாடல்கள் பலவற்றை அருட்பாவில் காணலாம். இதுவும் மூலர் மரபையே காட்டுவதாகும். 4. ஆயிரம் திருகாமம் "ஒரு நாமம் ஒருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேனம் கொட்டாமோ” என்பது நமது முன்னோர் கருத்து. இவ்வழியில் நமது திருநாவுக்கரசர் இறைவனது திருநாமத்தைப் பற்றி, மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லான் ஒப்புடையான் அல்லன் ஓர் ஊரான் அல்லன் ஓர் உவமன் இல்லி அப்படியும் அங்கிறமும் அவ்வண்ணமும் அவனருகே கண்ணாகக் காணின் அல்லால் - இப்படியன் இக்கிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொனாதே எனக் கூறியிருக்கிறார். இம் மரபைப் பின்பற்றி மாணிக்கவாசகர் இறை வனைப் பல பெயரிட்டு அழைக்கிறார். அவை சோதியன், துன்னிருள் தோன்றாப் பெருமையன், ஆதி அந்தம் நடுவு இம்மூன்றும் இல்லான், நோக்கரிய நோக்கு, நுணுக்கரிய நுண்ணுணர்வு, போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணி யன், காக்கும் எம் காவலன், காண்பரிய பேரொளி' என்பன. -