பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


5. கண்காணாப் பொருள்களாகச் சில :- அவை, சிவம், தவம், அருள், அன்பு, கருணை, நாதம், ஒலி, ஒளி, வெளி, மதி, கதி, நலம், கரம், உயிரி முதலியன. 6. செல்வப் பொருளாகச் சில : அவை, பொன், மணி, முத்து, மாணிக்கம், இரத்தினம், நிதி, செல்வம், நன்மணி, நவமணி, சிவமணி, பொன்மணி முதலியன. திருமறை :- இது "அருட் பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை' என்பது. இதை மகா மந்திரம் என்பர் வட மொழியினர். இதன் பொருள் இறைவன் ஒளிமயமான வன், அதுவும் பேரொளியினன், அதுவும் அருள் நிறைந்த பேரொளியினன் என்பதும், இறைவி, கருணை வடிவினள், அதுவும் பெருங் கருணை வடிவினள், அதுவும் ஒப்பற்ற பெருங் கருணை வடிவினள்’ என்பது மாகும். இது மணிவாசகப் பெருமான் இறைவனை "அம்மையே அப்பா' என்றழைத்த வழிமுறையைப் பின் பற்றியது போலும். 6. ஒளி வணக்கம் (அ) தொல்காப்பியர் தன் நூலில் கொடிநிலை, கந்தழி, வள்ளி எனக் குறிப்பிட்டுள்ளார். இம் மூன்றும் திரி, எண்ணெய், அகல் என்பவற்றைக் குறிப்பன என்று பசுமலை டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் கூறியிருக்கிறார். இது பழந்தமிழ் மக்களின் ஒளி வணக் கத்தைக் காட்டுவனவாகும். (ஆ) தமிழகத்தில் மிகப் பழமையான கோவில்கள் மூன்று. அவை, சிதம்பரம், திருவொற்றியூர், திருவாரூர், இம்மூன்றிலும் கடைசியாகத் தோன்றியது திருவாரூர்க் கோவில். இது தோன்றிய காலத்தை நமது சமயாச்சாரியார்