பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


களில் ஒருவர், திசை எட்டும் திரிவதற்கு முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே என ஐயத்தோடு கூறியிருக்கிறார். இதுவும் இன்று நேற்றுக் கூறியதல்ல. 1300 ஆண்டுகளுக்கு முன்பு கூறியது. கடைசிக் கோயில் தோன்றியதே. தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்ற திசைகள் அமைவதற்கு முன்னோ பின்னோ என்று ஐயப்பாடு கொள்ளும் பொழுது, அதற்குமுன் தோன்றிய இரு கோயில்களின் காலத்தை எவ்வாறு அறிவது? இந்த மூன்று தொன்மையான கோயில்களிலும் கருவறையில் அதாவது மூலதானத்தில் உருவங்கள் ஒன்றுமே இல்லை. இம் மூன்றிலும் அக்காலந்தொட்டு இன்றும் ஒளி வணக்கமே நடைபெற்று வருகிறது. (இ) திருக்கோயில் இன்றுங்கூட கோயில்களில் மக்கள் வழிபடும் பொழுது உருவ வணக்கத்தின்முன் கற்பூர வழிபாடும், அடுக்கு விளக்கு வழிபாடும் நடைபெறும் பொழுதுதான் இறைவழி பாடு உச்சநிலையை யடைகிறது. (ஈ) தைப்பூச விழா தமிழ்மக்களின் விழாக் காலமெல்லாம் நிலாக்காலத் திலேயே நடைபெற்று வருகிறது. சித்திரைமாதம் சித்திரை நட்சத்திரம் முழுநிலா, வைகாசி விசாகம் முழு நிலா, ஆனி மூலம் முழுநிலா, ஆடி உத்தராடம் முழுநிலா, ஆவணி அவிட்டம் முழுநிலா, புரட்டாசி கலைவிழா பத்து நாட் களும் வளர்நிலா, கார்த்திகை மாத கார்த்திகை முழுநிலா, மார்கழி திருவாதிரை முழுநிலா, தைப்பூசம் முழுநிலா, மாசி மகம் முழுநிலா, பங்குனி உத்தரம் முழு நிலா. ஆக தமிழ் மக்களின் விழாக்காலமெல்லாம் நிலாக்காலத்திலேயே நடை பெற்று வருகின்றன.