பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


யிருப்பது. மாசில் வீணை காதுக்குக் குளிரிச்சி, மாலை மதியம் கண்ணுக்குக் குளிர்ச்சி, வீசு தென்றல் மூக்குக்குக் குளிர்ச்சி, விங்கிளவேனில் உடலுக்குக் குளிர்ச்சி, மூசு வண்டறை பொய்கையின் நீர் நாவுக்குக் குளிர்ச்சி என்பது. எப்படி அவர் ஐம்புலன்களுக்கும் குளிர்ச்சியைத் தருகிற இவ்வைந்து பொருள்களைத் தேடிக் குறிப்பிட்டது. வள்ளலம் தமது அருட்ப வில் 6-ம் திருமுறையில் அருள் விளக்க மாலையில் ஒரு படலைப் பா டியிருக்கிறார். م التي تكبد கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே: தரு கிழல்ே, நிழல் கனிந்த கனியே. இப்பாடலிலும் திருநாவுக்கரசர் பாடலில் உள்ளது போல ஒரு புதைபொருளைக் கண்டு மகிழலாம். அது, கோடையிலே இளைப்பாறிக்கொள்ளும் வகை கிடைத்த குளிர் காதுக்குக் குளிர்ச்சி, நிழல் கனிந்தகனி கண்ணுக்குக் குளிர்ச்சி, ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீர் நாவுக்குக் குளிர்ச்சி, உகந்த தண்ணிரிடை மலர்ந்த சுகந்த மனமலர் மூக்குக்குக் குளிர்ச்சி, மேடையிலே விசுகின்ற மெல்லிய பூங்காற்று உடம்புக்குக் குளிர்ச்சி என வள்ளலாரும். தமது அருட்பாவில் இறைவனை நம் ஐம் புலன்களுக்கும் குளிர்ச்சியைத் தருகின்ற ஐந்து பொருள் களாகக் காட்டி மகிழ்கிறார். எப்படி அருட்பா இந்த அளவுக்கு மட்டுமல்ல, வள்ளலார் இன்னும் ஒரு படி தாண்டி, இறைவனை, இவ்வைந்து பொருள்களால் விளைகின்ற சுகமாகவும் அதற்கு மேல் அடைகின்ற முக்திப் பேற்றைச் சுகத்திலுறும் பயனாகவும் கூறி மகிழ்கிறார்.