பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அவர்கள் அணிந்துரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிச் சமய ஆன்மீக உலகிலும், தமிழ்க் கவிதையுலகிலும் பெரும் புரட்சி செய்தவர் வடலூர் திருஅருட் பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகள் ஆவர். அன்றாட வாழ்வில் அவதிப்பட்டு நிற்கும் மக்களின் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தியிருக்கின்றார். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார். சமுதாயத்தில் மலிந்து போயிருந்த கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக வேண்டும்’ என்று கடுமையாகச் சாடினார். 'நவிதரு சிறு’ தெய்வங்களுக்கு முன் வாயில்லாத சீவராசிகளாம் ஆடு, கோழி முதலியன பலியிடப்படுவதைக் கண்டும் உளம் கொதித்தார். வலைஞர் வலைகொண்டு மீன்பிடிக்க நீர் நிலை நோக்கிச் சென்ற போதுகூட அவர் உள்ளம் திடுக் கிட்டுத் துடித்தது, வறுமையால் வாடும் மக்களின் பசிப் பிணியினைத் தீர்ப்பதற்கு வழிகாண வேண்டுமென்று கருதினார். உண்மைத் துறவியான அவர், வடலூரில் சத்திய தருமச்சாலையினை அமைத்து பசி என்று வந்த ஏழை எளியவர்க்குப் புசி என்று கூறி அன்னமிட்டார். சாதிச் சண்டையிலும், கோத்திரக் குப்பையிலும், சமயச் சழக்கிலும் ஆழ்ந்து கிடந்த மக்களைக் கரையேற்றிவிட சத்திய சன்மார்க்க சங்கம் கண்டார். தமிழ்க் கவிதிையுலகிலும் அவர் செய்த புரட்சி மகத் தானது. ஏறத்தாழ ஆறாயிரம் பாடல்களை இயற்றிய அவர், ஆன்மநேய ஒருமைப்பாட்டினை வலியுறுத்தினார். எல்லோரும் இனிது வாழவேண்டும் என்று அவர் கொண்ட கோட்பாடு உலகளாவிய உயர்ந்த கோட்பாடு ஆகும். அஃது யாதும் ஊரே யாவரும் கேளி என்ற கணியன் பூங்குன்றனார். வழியில் வந்த-உலகத்தையெல்லாம் ஒன்றாக இணைக்கக்கூடிய உயரிய பண்பாடாகும். “நாடெல்லாம் வர்ழக் கேடொன்றுமில்லை என்று கண்ட