பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


மட்டும் அல்ல, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்காக் கண்டத்திலும் வெகு வேகமாகப் பரவி வருகின்றன. ஆண்டுதோறும் வடலூரில் தைப்பூசத்தன்று 10 லட்சக்கணக்கான மக்கள் கூடி ஜோதி வழிபாடு நடத்து உலகில் இனி கடும் நாஸ்திகத்திற்கோ. கடும் ஆஸ்திகத் திற்கோ இடம் இராது. எதிர்காலம் இனி சன்மார்க்கத் திற்குத்தான். காரணம் சன்மார்க்கம் எல்லா மார்க்கங் களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு ஒளிவீசுவதே யாகும். இது வரை மிகவும் சுருக்கமாக, நேற்றும் இன்றும் வள்ளலாரது வரலாற்றையும், அருட்யாவின் சிறப்பையும் பற்றிக் கூறினேன், இறுதியாகக் கூறுகிறேன். வள்ளலார் மக்களின் போக்கைக் கண்டு வாடினார், சமுதாயத்தின் குறைகளைக் கண்டு சாடினார். அவற்றைப் போக்க இறைவனது திருவருளைத் தேடினார். அதற்காக 5818 பாடல்களைப் பாடினார். தமது நெறிமுறைகளை மக்கள் ஏற்காதது கண்டு சித்திவிளாகத் தனி அறைக்குள் சென்று கதவை மூடினார். இறைவனோடு இறைவனாக இரண்டறக் கலந்து கூடினார்' என்ற சொற்களோடு இந்த எனது சொற் பொழிவை முடிக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த பல்கலைக் கழகத்தினருக்கும், வந்திருந்து சிறப்பித்த பெருமக்களுக்கும் என் நன்றியும் வணக்கமும் உரியன.