75° 1. யவனர், சோனகர் என்ற சொற்கள். இவ்விரு சொற்களும் அல்லாவென்று சொல்வோரைக் குறிப்பதாக இயம்பப்பட்டிருப்பது. இதிலிருந்து இவ்விரு சொற்களும் அதாவது யவனர், சோனகர் என்கின் ற ரு ரு சொற்களுமே முஸ்லிம்களைக் குறிக்கின்ற சொற்களாகக் கையாளப் பட்டி ருப்பதால் யவனர் என்பது இங்கே கிரேக்கரையோ ரோமா புரியினரையோ குறிப்பதாகக் கொள்ள டமில்லை என்பு தாம். 2. இப்பாடல்களில் கையாளப்பட்டுள்ள கலுபா என் பது, கலிபா என்பதின் திரிபாம். கலிபா என்ற அரபிச் சொல் லிற்குப் 'பிரதிநிதி' என்று பொருள். நபிகள் நாயகம் அவர் கட்குப் பின்னர் ஆட்சிபீடம் ஏறிய நால்வருக்கும் இச்சொல் சிறப்பாக அமைந்ததாகும். அந்த கலிபாக்களின் வழிவந்த வனே வின்னன் என்று பாடல்கள் தெளிவாகக் கூறுவதால். இந்த வின்னன் வடாநாட்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டில் படை கொண்டு தமிழகம் போந்த டில்லி முஸ்லிம் அரசின் பிரதிநிதியாதல் இயலா ஒன்றாம். காரணம், கலிபாக்கள் நால்வரும் குரைஷிக் குலத்தவர் ஆவர். டில்லியில் குரைஷிக்குல முஸ்லிம்களில் யாரும் ஆட்சி செய்யவில்லை. அவ்வாட்சியின் கீழ்ப் பணி புரியவுமில்லை என்பது வரலாறு. உண்மை இவ்வாறிருக்க வட நாட்டிலிருந்து படை நடத்தி வந்த முஸ்லிம் தளக் கர்த்தனையே பல்சந்தமாலை நூலாசிரியர் அச்சம் காரண மாகப் பாடினார் என இலக்கியச் செம்மல், அறிவின்மேதை, மதிப்புமிகு திரு. மு. அருணாசலனார் புனைந்திருப்பது ஆராய்ச்சியின்பால் பட்டதன்று. 3. பாடல்களில் வின்னன் என்ற வள்ளலை. வச்சிர நாடன், வகுதாபுரியன், அந்துபார்க் கதிபதி என்றெல் லாம் சுட்டப் பட்டிருக்கக் காண்கின்றோம். டில்லியிலி ருந்து படை நடத்தி வந்த முஸ்லிம் படைத்தளபதியை வச்சிரநாடன் என்பது பொருந்துமா? வகுதையம்பதி யானெனல் சரியாகுமா? அந்துபார்க்கதிபதி என்பது ஏற் புடைத் தாகுமா? இம்மூன்றும் கீழக்கரையைக் குறிக்கின்ற
பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/100
தோற்றம்