பயணமாக 93 பட்டத்துலெப்பை நெய்னாமரக்காயர், ஐதுரூஸ் என்னும் பெயரில், மிகப்பெரிய புதிய கப்பல் ஒன்றைக் கட்டி, முதல் அக்கப்பலைப் புனித ஹஜ் யாத்திரைக்கு ஓட்டி னார். அக்கப்பலில் இவர் தம் சொந்தச் செலவில் நூற்றுக்கும் அதிகமானவர்களை அழைத்தேகினார். இவ்வாறு அழைத் தேகப்பட்டவர்கள் ஆலிம்களாகவும், முப்தி, காரிகளாகவும், கவிஞர், புலவராகவும், ஞானவழி (சூபி) நாட்டத்தினரு மாவர். இவர்கட்கான முழுச் செலவுமே பட்டத்து லெப்பை நெய்னா மரக்காயர் அவர்களைச் சார்ந்ததாயிருந் துளது. இதற்கான சான்றினை சான்றினை ஞானவொலி நாயகமான கல்வது நாயகம் அவர்களால் இயற்றப்பட்டுள்ள ஞான உலகின் மாமேதை சதக்கத்துல்லா அப்பா அவர்களின் வர லாற்று நூலில் காணலாம். சின்னச்சீறாவிற்கும். "திரும் ணக் காட்சி” எனும் நூலிற்கும் கொடை நாயகர் இவரே! அடைக்கலமாலை பாடிய அப்துல்காதிர் மரக்காயரின் மகனாரின் பெயர் பட்டத்து சுல்தான் அப்துல்காதிர் மரக் காயர் என்பதாம். இவரும் இவர் தம் முன்னோர்களைப் போன்றே ஈயும் தன்மையை இயல்பாகக் கொண்ட வள்ள லாவார். நல்ல கல்விமான்; சிறந்த ஞானி. இராமநாதபுரம் சேதுபதியுடன் நெருக்கமான நட்புப்பூண்டவர். இவர்களின் நட்பு. உறவுமுறை செப்பி அழைத்துக் கொள்ளுமளவிற்கு ஒன்றியதாக, உயர்ந்தாக இருந்த தென்பர். . பட்டத்து செய்யது முகம்மது ஆலிம் மரக்காயர் பட்டத்து சுல்தான் அப்துல் காதிர் மரக்காயருக்கு இரண்டு ஆண்மக்கள். மூத்தவர் பெயர், பட்டத்து செய்யது முஹம்மது ஆலிம் மரக்காயர் என்பது. இரண்
பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/119
தோற்றம்