94 டாம் மகன் பெயர் லெப்பை சாஹிப் மரக்காயர் என்பதாம். இவ்விருரைவப் பற்றியும் புலவர் நாயகம் என்கின்ற விருதுப் பெயரினையுடைய சேகுனாப் புலவர் பாடியுள்ள நிருபச் செய்யுள் (சீட்டுக்கவி சான்று பகர்கின்றது. லெப்பை சாஹிப் மரக்காயரின் மக்களில் மூத்தவர் பெயர் லெப்பை நெய்னா மரக்காயர் என்பது. அத்தாவுல்லா ஹாஜி மரக்காயர் என்பவர் இரண்டாம் மகன். ப. அத்தாவுல்லா ஹாஜி மரக்காயர் அத்தாவுல்லா ஹாஜி மரக்காயருக்கு இரண்டு மக்கள். முதல் மகன் பெயர் முஹம்மது இத்தீரீஸ் மரக்காயர் ஆகும். இரண்டாம் மகனின் பெயர் அப்துல் குத்தூஸ் மரக்காயர் என்பதாம். இவ்விருவரும் செழிப்போடும். நலத்தோடும், இவர்கள் தம் முன்னோரைப் போன்றே இரத்தினவணிகராக வாழ்ந்து வருகின்றார்கள். இவ்விருவருக்கும் குழந்தைச் செல்வங்கள் உண்டு. வள்ளல் சீதக்காதி மரக்காயரின் முதல் தம்பியாகிய பட் டத்து மாமு நெய்ன மரக்காயர் என்பவரின் சந்ததி விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது. இவர்களே இன்று வள்ளல் சீதக் காதியின் வாரிசுகளாக விளங்கி வருகின்றார்கள். வள்ளல் சீதக்காதி மரக்காயரின் கடை மரக்காயரின் கடைசித் தம்பியாகிய ஷேஹ்கு இபுறாஹீம் என்பவரின் வழித்தோன்றல்களும் கீழக் கரையில் வாழ்ந்து வருகின்றனர். இவர் தியாக வாழ்வினர் என்பது, இவர் தம் சமாதியிலுள்ள மீசான் (நடு) கல்லில் காணப்படுகின்ற குறிப்பின் மூலம் அறியமுடிகின்றது. இ ருடைய அடக்கத்தலம் (சமாதி) வேதாளை என்னும் ஊரில் வ
பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/120
தோற்றம்