நல் பொருள் தொல ஆய்வு 101 ஆக, இவை அனைத்தையுக் கொண்டு. நோக்கின்),கி.பி. 1657ஆம் ஆண்டினை 'யொட்டிப் பிறந்து, 1720ஆம் ஆண்டை யொட்டிய காலத்தில் விளனல் சீதக்காதி மரக்காயர் பொன்னுலகடைந்தார் எனக் கொள்ள வியலும். எனவே, இதுவே இவர் தம் காலமாகும். டில்லி பாதுஷா அவுரங்கஜேப் தொடர்பு சீதக்காதி நொண்டி நாடகத்தில் வருகின்ற நொண்டி. செஞ்சியில் துல்பர்கான் பாசறைக்குள் நுழைந்து, குதிரையைத் திருடமுனைந்து, அகப்பட்டு, கால்கள் துண்டிக்கப்பட்ட போது, அங்கிருந்த மாமுநெய்னா மரக் காயர், தனக்கு உதவி, உயிர் பிழைக்கச் செய்து, பொருள்தந்து ஊருக்கு அனுப்பினார், ஊர் சேர்ந்ததும், கீழக்கரையில் வந்து தம்மைச் சந்திக்குமாறும் சொன்னார் என நொண்டி நாட கத்தில் நொண்டி கூறியதாகக் காணப்படுகின்றது. இந்த மாமுநெய்னா மரக்காயர்,சென்னையிலிருந்து செஞ்சிப்பாசறை யில் வந்து தங்கி இருந்ததாகவும் பாட்டு:- அந்தநல் சமயத்திலே வகுதை யில்வாழ் அப்துல் காதிறுப் பிள்ளை புத்திரனானோன் மந்தரத் திண்பு யத்தான் கனகதுரை மாமு நாயினாப் பிள்ளை மகிபாலன் வெம்பிய மதகரியான் காயலில் விசய ரகுநாதப் பெரிய தம்பி தம்பித் துணையென வாழ் குங்குமத் தாமமி லங்குபுய மாமுநயினான் சென்னப்பட் டணமிருந்து செஞ்சியில் செருக்குடனே வந்து இருக்கையிலே...
பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/128
தோற்றம்