உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11t அவர்களும், அவர்கள் சந்ததியினரும், பாண்டிய மன்னர் களிடையே அமைச்சர்களாகவும், தளபதிகளாகவும், கடற் காவலராகவும் குறுநில மன்னர்களாகவும் திகழ்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தலைமுறை தலைமுறையாகக் கீழக் கரை நகரை தங்களின் பிறப்பிடமாகவும், இருப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். . வள்ளல் சீதக்காதி மரக்காயர், இவருடன் பிறந்த மாமு நயினா மரக்காயர் என்கின்ற பட்டத்துப் பெரிய தம்பி மரக் காயர், இவர்களின் தந்தை, தாய், தாயாரை ஈன்ற தந்தை ஆகியோரின் அடக்கத் தலங்கள் கீழக் கரையில் உள்ளதை இன்றும் காணலாம். வள்ளல் சீதக்காதி வாழ்ந்த அரண்மனை இடிபாடுற்ற நிலையில். சுவர்கள் மட்டும் எஞ்கிய தன்மையில் கீழக்கரையில் இருக்கக் காண்கின்றோம். இவருடைய வசந்த மாளிகை (கடற்கரை பங்களா) இந்திய அரசின் சுங்கச் சாவடியாகக் கீழக்கரையில் இருக்கினறது. வை போன்ற இன்னும் பல தோட்டம் துறவு களும் வள்ளல் சீதக்காதி மரக்காயரின் நினைவைத் தந்து கொண்டு கீழக்கரையில் திகழக் காண்கின்றோம். இவர் அடித்தளமிட்ட பள்ளிவாசல் கீழக்கரையில் இருக்கின்றது. கிழவன் சேதுபதி மன்னனிடம் ராமநாத புரத்தில் திவானாக வள்ளல் சீதக்காதி பதவி வகித்த செய்தியும் உண்டு. இவை அனைத்தும், வள்ளல் சீதக்காதி மரக்காயர் என் பவர் யார் என்பதை விளக்கிக் காட்டுகின்றன. இனி வள்ளல் சிதக்காதி சிதக்காதி ஆற்றிய பணிகள், செய்த அறக்கொடைகள், அவருடன் உறவு பூண்ட - அவரைப் பாடிய புலவர்கள் பற்றி ஆய்ந்து காணலாம் வள்ளல் பற்றிய நூல்கள் வள்ளல் சீதக்காதி மரக்காயர் பற்றி- அவர் பெயரைத் தலைப்பின் தலைப்பாகக் கொண்டு திகழுகின்ற நூல்கள்