xiii மரபான வள்ளல் சீதக்காதி மரபும் தமிழகத் தனிப்பண்பு காத்துத் தலைநின்ற செய்தியை ஆராய்ச்சி அறிஞர் கவிஞர் கா.மு. .மு.செரீப் நமக்கு நன்கு எடுத்துக் காட்டியுள்ளார். வள்ளல் சீதக்காதி சமய இன நாட்டு வேறுபாடின்றி, எல்லாத் தமிழ்ப் புலவராலும் தமிழ் எழு வள்ளல் மரபு புதுப்பித்த ஒரே அக்காலத் தமிழ் வள்ளலாகப் போற்றப்பட்டவர் ஆவார். அவர்ஆதரவில் இசுலாமியப் பள்ளிகள் மட்டுமின்றி, இதர சமயக் கோயில்களும் கூடத் தழைக்கத் தவறவில்லை. 3. வள்ளல் சீதக்காதிக்கும் ம் உமறுப்புலவருக்கும் அல்லது உமறுப் புலவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு ஆனால் உமறுப்புலவர் என்ற பெயரில் இருவர் பெயர் ஒன்றாக மயங்கி உள்ளன. ஏனெனில் இருவரும் அவ் வள்ளலைப் பாடிய அல்லது அவரால் புரக்கப்பட்ட அவர் காலத்தவர்களே. அவர்களுள் அவரது திருமண விழாவில் செய்தக்காதிறு மரக்காயர் திருமணவாழ்த்து என்ற அரிய காப்பியம் பாடியவர் ஒருவர், மற்றவர் வள்ளலைப்போலவே கீழக்கரையில் பிறந்து வாழ்ந்து சீறாப்புராணம் பாடியவர். இதனை ஆராய்ச்சியாளர் கூடியவரை தெளிவு படுத்தி யுள்ளார். 4. சங்ககாலத்துக்கு நெடிது முன்பிருந்தே தமிழருடன் எகிப்தியரும் கிரேக்க உரோமரும் மேலை ஆசிய நாகரீக மக்களும் கடல்வழி வணிகத் தொடர்பும் பிற தொடர்பும் கொண்டிருந்தனர். ஆனால் சங்க இலக்கியம் யவனர் பற்றி மட்டும் குறிப்பிடுகிறது. பிற்காலத் தமிழ் மரபும் இந்திய மர பும் யவனர் சோனகர் மிசுரதேசம் என்ற பெயர்களைக் குறிக் கின்றன.மிசுரம் என்பது எகிப்து. யவனர், சோனகர் ஆகிய சொற்கள் முறையே கிரேக்க உரோமரையும் அராபிய இசுலாமியரையும் குறிப்பதாக வரலாற்றாசிரியர் பலர்கொண் டுள்ளனர். ஆராய்ச்சி அறிஞர் கா.மு.செரீப், இசுலாம் நெறி முழு நெறியாகத் தோற்றுவதற்கு முன்பு வந்த அராபியரை யவனர் என்ற சொல்லும் அதன் பின் வந்த அராபியரைச் சோனகர் என்ற சொல்லும் குறிக்கின்றன
பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/14
தோற்றம்