113 தரப்பட்டதாகக் கூறியிருக்கக் காணுகின்றோம். இப்பழக்கம் மரக்காயர் குடும்பங்களில் இன்றும் உள்ளது. கப்பல்கட் தம், தோணிகட்கும், படகுகட்கும் உள்ள வேறு பெயர் களும் குறிக்கப் படுகின்றன. அநேகம் வழக்குச் சொற்களைத் தந்து தமிழறிஞர்களை அவை பற்றி ஆயும் ஆவலைத் தூண்டுகின்றது. உதாரணமாக, மணமகளுக்கென அனுப்பப்படுகின்ற பணி ஆட்களைப் வற்றிய குறிப்பில், "தாளடியில் நின்று தனைப்பணிந்து வேலை செய்ய ஆளடியா ராயிரமும் ஆண்டியா ராயிரமும்... என்றிருப்பதில் பெண்பணியாளரை, . ஆளடியார்' எனக் குறித்திருப்பது காண்க. அதாவது, 'ஆள்' எனும் சொல்லைப் பெண்பால் சொல்லாகக் கவிஞர் குறித்துள்ளார். இப் பழக்கம், இன்றும் தஞ்சை மாவட்டத்தில் திகழக் காண்கின் றோம். அதாவது, நடவு செய்கின்ற பெண்ணை 'நடவாள்' என்றே தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறிப்பர். இந் நூலில் உள்ள பாடல்களைக் கொண்டு, வள்ளல் என்ன என்ன வியாபாரம் செய்தார்? எந்த எந்த நாடுகளு டன் வணிக உறவு பூண்டிருந்தார் என்றெல்லாம் காணமுடி கின்றது. வணிகத்தில் அவர் எவ்வளவு வல்லவராயிருந்தார் எனத் தெரிந்து கொள்ள வியலகின்றது. தமிழை வள்ளல் சீதக்காதி நேசித்த மேன்மை புலப்படுகின்றது. வள்ளல் சீதக்காதியின் தமிழ்ப் பற்றை வைத்துக் கீழக்கரையை, 'தமிழ்க்காயல்' என்று உரைத்துள்ளார் இந்நூலின் ஆசிரியர். நன்மை விசயரகு நாதப் பெரிய தம்பி தன்ம பரிபாலன் தமிழ்க்காய லாதிபதி - என்பது பாட்டு. பாடல் 17 தமிழைத் தன்னுடைய பெயருடன் இணைத்துக் கொண்டுள்ள ஊர் தமிழகத்தில், தமிழ்க் காயலென்கின்ற கீழக்கரையாகத்தான் இலங்குகின்றது இன்று வரை. இலக் 8
பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/142
தோற்றம்