146 99. அட்டகச மன்னமத யானைத் திரள்கோடி வட்ட மிடுங்கவன வாசித் திரள்கோடி 100. ஆரங்கி யாக அண்ட கூடந் தகர்த்திடிக்கும் பீரங்கி கோடி பிடிகோடி தேர்கோடி 101. பச்சைக் கடகம் பரியகலிக் கத்துறாய் வச்சிரப் பந்தி வயிடூரி யக்கடுக்கன் 102. சீனச் சுருட்டுச் சிவந்தசக லாத்துவெகு மானச் சுளிகையங்கி வச்ராங்கி பொற்சோடு 103. உச்சிதமாய்க் கட்டி யுரகத் துடன்கொடுக்க மெச்சியிவன் நிக்காஹ் வேந்தனென வேமகிழ்ந்து 104. தண்டிகைமுன் பின்வெள்ளைச் சாமரைகா ளாஞ்சிகுஞ்சம் அண்ட முகடுடைய ஆனைமேற் பேரிகையும் 105. நரகசின்ன மென்... குரகதாமே நாகசர. ... ...ஆ ...கயும் 106. சொல்லரிய சாமித் துரோககண்ட தண்டயமும் வல்லமையாய் நல்க வரிசைபெற்ற மன்னவன்காண்' 107. வேலிக் கடல்புடைசூழ் மேதினியோர் கொண்டாடத் தாலிக்கு வேலி சத்தசமுத் ராதிபன்காண் 108. முரசு முழங்குமணி முன்றிலான் மன்னர்க் கரசுநிலை யிட்ட அதிகமரி யாதையன்காண் 109. ஆசானு பாகன் அ......... த தேசாதி பத்தியமுஞ் சிங்கா.. காண்
பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/176
தோற்றம்