154 174. மொகுமொகென அளிகுலவு முதிருமத் சலமொழுகு விகடரண முக்கலணை வெள்ளானை யேறினனே 175. திடதிடென... நடவிகட செயவிசய தடகரட மடையொழுகு தவளவெள்ளை யானையினான் 176. தடவிகட கரடகடத் தவனமது மொகுமொகெனத் தடவிகட கரடகடத் தவள வெள்ளை யானையினான் (177-184-ஆம் கண்ணிகள் எழுதிய இரண்டேடுகள் இல்லை 185. பிரசமுறு வாகைப் பெருந்தொடையல் சூடிவெற்றி அரசர்மக்கள் கோடிவெள்ளை யானைதனைச் சூழ்ந்துவர 186. ஆணியல்பு காட்டி அலகம்பு சேர்சுரிகை தூணியும்வில் லும்பிடித்துத் தொட்டியர்பல் கோடிவரக் 187. கேடகஞ்செங் கோடி கிரணவடி வாளெடுத்துக் கோடையிடிபோல் கோடி குதிரைரா வுத்தர்வரக் 188. கட்டியக் காரர் கணவிருது கூறிவரப் பட்டவித் வாங்கிசர் பல்திசையுங் கொண்டாடச் 189. சந்திரனைச் சூழ்துவருந் தாரா கணம்போல முந்து கிளைஞர் மொகுமொகெனச் சூழ்ந்துவரத் 190. திமிரி தடாரி திடுமன் கனகத்தப்புக் குமுறும் பதலை குடமுழவு வீராணம் 191. பேரிகை பம்பை பெருமுரசு மல்லாரி பூரிகை நாகசுரம் பொங்குகடல் போல்முழங்க
பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/184
தோற்றம்