00 முறையாக ஆய்வுத் தொழில் புரிவோர்க்கும் அகமிக மகிழ்ச்சி தருவதாகும். ஆய்வாளரின் நாட்டுப்பற்றுக்கும் மொழிப்பற்றுக்கும் ஆணிவேர்ச் சான்றுகள் வருமாறு: £ "இந்நூலாசிரியரோ.... தமிழ்க் மகிழக் காண்கிறோம். கூறும்போது, பாடி காயல் என்று சீதக்காதியின் ஆற்றல் பற்றிக் 'கோரப் பறங்கிக் குலங்களெல்லாம் வேரறுத்துச் சூரத் தனமிகுந்த சுத்தரண கேசரிகாண்' என்றுரைக்கின்றார். இவ்வரிகள் நமக்கு நினைவூட்டுவது பிரஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும். கால் ஊன்று முன்னம் தமிழகத்தில் தென்கடற்கரைப் பகுதியின் மீது ஆக்கிரமிப்பு நடத்திய போர்த்துக்கீசிய - டச்சு வெள்ளை நிறத்தவரை. அவர்தம் ஆதிக்கத்தை, வள்ளல் சீதக்காதி வீரத்தையே இப்பாடல் கூறுகின்றது என்பதேயாம். எதிர்த்த மேற்கண்ட குறிப்பு இந்நூல் தென்னக விடுதலை வரலாற்றுக்குத் தரும் சிறந்த சீதக்காதி பரிசாகும். சீதக்காதியின் பெயரால் சொல்லப்படும் கதைகள்' என்ற தலைப்பில் ஆசிரியர் வெளியிட்டிருக்கும் எண்ணங்கள் அவர்தம் நடுநிலைத் திண்ணம் காட்டும் வண்ணங்கள் ஆகும். இனி, இவ்வணக்கவுரையை முடிக்குமுன் கவிஞரைச் சிறிய தந்தையெனப் பெரிதும் மதிக்கும் யான் கூறத்தக்க தெல்லாம் 'வள்ளல் சீதக்காதி வரலாறு' பற்றிய இந்நூல், எல்லாம் வல்ல அல்லாவின் அருளால் விரைவில் விற்பனை யாகி மறுமதிப்புப் பெற வேண்டும். அது இந்நூற் பொருளுக்கு மறுபதிப்பாக மட்டுமன்றி மறுமதிப்பாகவும் விளங்கும் வகையில் செப்பமாகவும் செறிவாகவும் நடை பெற்று அதிகப் படங்களுடன் வெளிவர வேண்டும். இலக்கியப் பகுதிகளும் உரைக் குறிப்புகளுடன் ஒளி பெற வேண்டும். அவ்வளவே - அவ் அளவே! சென்னை - 5 18 - 8 - '81 ந. சஞ்சீவி
பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/25
தோற்றம்