உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இங்கே தோன்றி, தமிழை வளர்த்த வள்ளல்கட்கு அளவேயில்லை. அத்தகு வள்ளல்களின் வாழையடி வாழை யாக வந்தவரே வள்ளல் சீதக்காதி. வள்ளல் சீதக்காதியைப் பற்றி அறியுமுன், அவர் சார்ந்திருந்த சமயம் (இஸ்லாம்) பற்றிச் சிறிதளவேனும் அறிந்து கொள்வது அவசியம். இந்த ஆய்விற்கு அடிப் படையாகத் தமிழர் - அரபியர் உறவு பற்றி அறிதல் வேண்டும். ஏனெனில், இஸ்லாமிய சமயம், அரபு நாட்டில் தோன்றிய சமயம். அச் சமயம் சார்ந்த குடும்பம் ஒன்றில் பிறந்தவர் வள்ளல் சீதக்காதி. ஆகவே, அவர் சார்ந்திருந்த சமயம் தமிழகத்திற்கு எப்போது வந்தது? எப்படி வந்தது? எனத் தெரிந்து கொள்வது பயனுடையதாம். இதை அறிந்து கொள்ள முதலில் நாம் தமிழர்-அரபியர் உறவு பற்றி ஆய்தல் வேண்டும். தமிழர்-அரபியர் உறவு தமிழர் - அரபியர் உறவு என்பது (இன்று) நேற்றுத்தோன் றியதன்று. சுமார் நான்காயிரம் ஆண்டுகட்கு முந்தியதென் பர் ஆய்வாளர். அரபி இன மக்கள் வாழுகின்ற நாடு அரபி நாடு இந்த நாடு ஆசியாக் கண்டத்தின் தலை போல் உள்ளது. ஆம், ஜப்பான் நாட்டை ஆசியாக் கண்டத்தின் கால் எனக் கொண்டு நோக்கினால், அரபு நாடு தலையாகக் காட்சி தரும். ஐரோப்பா-ஆபிரிகாக் கண்டங்களின் நிலவழிச் செலவு அரபு நாட்டின் மீதாகத்தான் நடந்தாகவேண்டும். . விண்வெளிப் பயணம் தோன்று முன்னர், கடல் வழிப் பயணமும் கடினமாக இருந்த நாளில், அரபுநாடு அண்டை அயல் நாட்டினரால் விரும்பி நட்புக் கொள்ளத்தக்க வகையில் அமையப் பெற்ற நாடாகத் திகழ்ந்துள்ளது. உதாரணமாக, கி.மு. முதலாம் நூற்றாண்டு தோன்றும் வரை கிரேக்க-உரோமர்கள் இந்தியாவை வந்தடைய அரபு மண்ணை மிதித்துத் தீர வேண்டிய அவசியமிருந்தது.