உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 ஆலயம் ஒன்று இன்றும் இங்கே திகழ்கின்றது. ஒரு காலத்தே இந்த இந்த மீனாட்சி - சொக்கேசர் உள்ள பகுதியை ஒட்டியதாக வைகை ஆறு ஓடிக் கடலில் கலந் திருத்தல் வேண்டும். காரணம், இந்த மீனாட்சி-சொக்கேசர் ஆல யத்தை ஓட்டிக் கீழக்கரை மேலக்கரை என்ற பகுப்புப் பெயர்களைக் கொண்டதாகக் கொற்கை திகழ்ந்துள்ளது. இயற்கையின் எழுந்த வெள்ளத்தால், வைகை ஆறு சற்றே விலகி, கீழ்பால் சென்றிருக்கக் காண்கின்றோம். சீற்றத்தால் மேலக்கரை, கீழக்கரை, கேணிக்கரை என்ற மூன்று பிரிவுகளாகப் பிற்காலத்தே ஆகிவிட்ட ஊரே முற்காலக் கொற்கைத் துறையின் மையப்பகுதி என்று தெரிகின்றது. இந்த ஊருக்குப் பவுத்திரமாணிக்கப்பட்டினம், நினைத் தது முடித்தான் பட்டினம், வச்சிரநாடு, செம்பிநாடு,அனுத் தொகை மங்கலம் என்றெல்லாம் பெயர்களுண்டு. நாடு என்பதே பிற்காலத்தில் மண்டலமாயிற்றென்பர். மண்டலங்கள் என்பதே மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பாளையங்களாக ஆகியுள்ளன. . மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தே அமைக்கப்பட்ட பாளையங்களில், வச்சிரநாடு என்கின்ற செம்பிநாடு சேர்க்கப் பட்டிருக்க வில்லை. எனவே செம்பிநாடு என்பது, அறந் தாங்கிக் கோட்டை, சாக்கோட்டை, கீழநிலக்கோட்டை, தேவகோட்டை, சத்துரு சங்காரக்கோட்டை, சிவகங்கைச் சீமை, ராமநாதபுரம் ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உள்ள டக்கிக் கொண்டதாக இருந்திருத்தல் வேண்டும். இப்படி யூகிக்கக் காரணம், இப்பகுதிகளில் எது ஒன்றிலுமே மதுரை நாயக்கப் பேரரசு பாளையம் அமைத்திருக்கவில்லை. பதி னேழாம் நூற்றாண்டு வரை இப்பகுதிகள் அனைத்தும் ராம நாதபுரம் சேதுபதி அரசபரம்பரையினரின் ஆட்சிக்கு உட் பட்டிருந்தமை தெரிகின்றது. ஆக, செம்பிநாடானது ஆதிநாளில் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு, மதுரைப் பாண்டியப் பேரரசின் கீழ், பட்டத்து இளவரசராக வருவோரின் ஆளுகைக்கு