உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மிகுநாண் மலர்களும் கொண்மின்கள் கொள்ளாவிடின் மதுவல் தொகுகாமன் ஐங்கணை யாலெம தாவி துணுக்குறுமே. 4. வேழம் வினாதல் செம்முக மானதர் செங்குங்குமப் புயர்சீர் சிறந்த மைம்மலி வாசப் பொழில்வாய் மதியன்ன வாணுதலீர் மும்மத மாரிபொழியப் பொழில் முகில் போல் முழங்கிக் கைம்மலை தான்வரக் கண்டதுண்டோ நும் கடிபுனத்தே. 5 தினைமுதிர் வுரைத்தல் இயவன ராசன் கலுபதி தாமுதல் என்னவந்தோர் அயன்மிகு தானையர் அஞ்சுவண்ணத்தவர் அஞ்சலென்னாக் கயவர்கள் வாழ்பதி போலத் தினைப்புனக் காய்கொய்து போம் பயன்விளை வாம்படி பூத்தது வேங்கை பணிமொழியே! 6. ஆறு பார்த்துற்ற அச்சக்கிளவி பிறையார் நறுநுதற் பேதை தன் காரணத்தால் பெரும மறைநா ளிரவில் வருவது நீயொழி வச்சிரநாட் டிறையாகிய கலுபா முதலானவர் யானைகணின் றறைவாழும் விஞ்சத் தடவிகள் சூழுமணிவரையே 7. இயற்பழித்தல்-புள்ளொடுபுலம்பல் வானது நாணக் கொடையாலுலகை வளர்த்தருளும் சோனகர் வாழும் செழும்பொழில் சூழ் அந்து பார் தானணி வாணுதல் கண்டும் பகலே தனித்தனியே மானமி லாதிரை தேரும் பறவைக டாமழிந்தே. 8. பதியளா வுரைத்தல் அனையார் வில்லார் நுதலியும் நீயுமின் றே சென்று மேவுதிர்சூது எல்லாம் உணர்ந்தவர் ஏழ்பெருந் தரங்கத் தியவனர்கள் அல்லா வெனவந்து சாற்றியும் நாதரைக் கைதொழுஞ்சீர் நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே. இவ்வரிய எட்டுப் பாக்களாலும் அறியவருவது பல.