பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - வள்ளுவம்

குன்றிந்தார்; பொன்னிந்தார்; பிற பல்பொருள் ஈந்தார்; கொடை மடம் பட்டார் என்று புகழக் கற்றோமேயொழிய, அளவின் விஞ்சி ஈந்து அழிந்தார்கள் எனா, அளவறியா ஈகையால் அன்னோர் கொடை வற்றிப் போய்விட்டது எனா நாம் கற்றோம் அல்லோம். ஆதலால், கடமையும் ஆற்றி, உரிமையும் பேணி, கொடையும் வழங்கித் துய்ப்பும் நுகர்ந்து, வாழும் அளவறி நிலையே வள்ளுவமாகும்; திருக்குறட் பொருளறமாகும்; பொருட்பயன் நிலையாகும். யாரும் கொளத்தகும் உலக வாழ்வாகும்.

அளவறி நண்பர்களே! அறிவியற் கலையினின்றும் விளைந்த பல்லூர்திகளும், மின் யல் ஆக்கங்களும், எண்ணிறந்த பிற புது நுண்பொருள்களும் இல்லாப் பழையவுலகத்தை, இன்று நாம் கற்பனைக் கண்ணாற் காணவொல்லும், அப்பழைய உலகமே நீள்வதாயினுங் கூட ஆண்டு வாழவொல்லும். ஆனால் மொழி யில்லா ஒருலகு நம் கற்பனைக்கு எட்டாதது. மொழியின்றி நினைக்கும் திறம் இன்று நமக்கு இல்லை. மொழி அளத்தற்கில்லா ஆற்றலுடையதாய், உலக வளர்ச்சிக்கே ஊட்டம் தருவதாய், நினைவோடு, இரண்டறக் கலந்து வாழ்வை ஆட்சி செய்வது. ஆதலால் மனந்துாய்மை இனந்துாய்மை, அறிவுத் தூய்மை, வினைத் து.ாய்மைகளுக்கு ஒப்பக் கற்கும் சொல்லும், எழுதும் மொழியும் தூய்மையாதல் இன்றியமையாதது. மொழித்துாய்மை வேண்டும் குறிப்புக்கள் இந்நூலகத்துப் பலப்பல. ‘ஆக்கமும் கேடும், அறனும் பொருளும் மொழியால் வருமாதலால், சொற்றிறன் அறிந்து சொல்லுக எனத் திருக்குறள் சொல்லாற்றலை அறிவுறுத்தும்.

ஐதராபாத்து இந்தியவரசில் இணைய மறுத்த போது, அதன்மேல் இந்தியவரசு போர்தொடுக்கும் என்றே பலரும் கருதினர். போர் என்ற சொல்லையே ஆண்டனர். அதுகாலை, நேரு பெருமகன் திறனறிந்து வெல்லுஞ் சொல்லொன்று விளம்பினார். போர் என்பது வெளிநாட்டுத் தொடர்புடைய சொல். இயல்பில் இந்திய நான்கெல்லைக்கு உட்பட்ட ஐதராபாத்தின்மேல் செய்யப்புகுவது போர்வினை யன்று. அஃதோர் காவல் வினை என்றார். நாட்டகத்துக் கொள்ளும் காப்பு நடவடிக்கை’ என்று சுட்டினார். இச்சொல்லாட்சி அவர்தம் தெளிந்த அரசியல் அறிவை நன்கு