பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட் பயனிலை 97

தோற்றிற்று. ஆதலால், வள்ளுவர் நெஞ்சினை மயக்கறக் காண வேண்டுவார்க்குத் தமிழ் மொழியறிவும், திருக்குறளகத்து ஆசான் ஆண்ட சொற்களின் பொருளறிவும், நடையறிவும் நன்னர் வேண்டும். ஏன்? தம் நூல் என்றும் நின்று விளங்கும் வண்ணம், செவ்விய கிளவிகளை ஆய்ந்தெடுத்து, காலம் இடம் வலியறிந்து, ஆண்டமொழியறிஞர் வள்ளுவர்.

கொடைக்கடனும் துய்ப்புரிமையும் பொருட் பயன்கள் என வரையறுத்தேன். கொடைக் கடன் ஒப்புரவும் ஈகையும் என இருவகைப்படும். இவ்விரு பெயரால் தனித்தனி அதிகாரங்கள் இருப்பதுவே, அன்புடைமை அருளுடைமை போல இச்சொற்கள் வேறுபட்ட பொருளின என்பது கொள்ளப்படும். அவ்வேறுபாடு என்னை பொதுக் கொடை ஒப்புரவு ஆம்; தனிக்கொடை ஈகையாம். ஒப்புரவு என்கிற விளக்கு, ஒ- பல்லுயிர்க்கும் ஒத்த, புரவு- கொடை அல்லது. காப்பு என்பது பொருள். உயர்திணையுள்ளும் அஃறிணை யுள்ளும் பல்லுயிர்க்குப் பொருந்திய பெருங்கொடை என்பதுவே, ஒப்புரவு அதிகாரத்தின் கருத்து என்று துணிதற்கு ஆண்டு வரூஉம் உவமைகளே கரி, பேரறிவாளன் திரு ஊருணி நீர் நிறைந்தற்று’ (215). பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று (216), மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு (211) எனப் பரந்த பொது வுவமைகளையே ஆளுவார். கல்வி நிலையம், நூல் நிலையம், உடற்கழகம், ஏழைவிடுதி, கோயில், பல்வகை மருத்தில்லம், தண்ணிர்ப்பந்தல், ஊருணி, பூங்கா, விளையாடு களம் என்றின்னவை ஒப்புரவுத் தோற்றங்களாம்.

ஈகையோ எனின், வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை (221) எனவும், அற்றார் அழிபசி தீர்த்தல் (226) எனவும் விதந்தாங்கு, தனியுயிர்த் துன்பம் நீக்கும் சிறப்புக் கொடையாம். ஒரு தோட்டத்துச் செடிகளுக்குக் கிணற்றிலிருந்து கால்வாய்வழி நீர் பாய்ச்சு கின்றோம். இதனால் செடிகள் பலவும் ஒருங்கே நீரைக் குடிக்கின்றன. இஃது ஒப்புரவுக் கொடையணையது. செடிதோறும் சென்று சென்று பார்வை யிடுகின்றோம். நீர்பெறாச் செடிகளுக்குத் தனித்து நீர் ஊற்றுகின்றோம். அரும்பிய இளம் பயிர்களுக்கு வேர் அறாதபடி கொள்ளளவு அறிந்து நீரைத் தெளிக்கின்றோம். இஃது . 7 -