பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 00 வள்ளுவம்

ஆளுக்கு ரூபாய் நூறாயிரமாகப் பத்திலக்கம் திருக்குறள் வளர்ச்சிக் கென வழங்கும் நோக்கு உடையோம் என்றும் உண்மையை உவப்பொடு மொழிந்தனர். அப்பெரு மக்கட்கு நம்மனைவர் வணக்கம் உரியதாகுக. நீங்கள் கருதும் திருக்குறள் வளர்ச்சி யாது. இப்பெரும் பொருள் வைத்துச் செய்யும் செயல்கள் யா?” என்று வினவினேன். “திருக்குறளை யாண்டும் யார்க்கும் பரப்பவேண்டும். தமிழகமும் இந்தியாவும் உலகமும் ஏசு பெருமகன் விவிலிய நூல் போல் அறியச் செய்ய வேண்டும். தமிழகப் பதிப்பு இந்தியப் பதிப்பு ஞாலப்பதிப்பு பன்மொழிப் பதிப்பு என்ற வகையானும், குழந்தைப் பதிப்பு பள்ளிப் பதிப்பு பரிசுப் பதிப்பு விலையில் பதிப்பு என்ற வகையானும், ஆராய்ச்சிப் பதிப்பு சொற்பதிப்பு பொழிப்புரைப் பதிப்பு விரிவுரைப் பதிப்பு நுண்ணுரைப் பதிப்பு நிகழ்ச்சிப் பதிப்பு என்ற வகையானும் முறைகள் பல மேற்கொள்ள வேண்டும். திருக்குறள் இதழ் வெளியிடலும், வள்ளுவர் அச்சகம் அமைத்தலும், வள்ளுவர்க்குக் கோயிலொடு மண்டபம் கட்டலும் இன்ன பிறவும் எங்கள் நோக்கம்,” என்று தெளிந்து விடையிறுத்தனர். ‘இப்பத்திலக்கம் பற்றாதெனின், இன்னும் பல்லிலக்கம் தருவோம்” என உறுதி வழங்கினர். உவகையடைந்தேன். வந்த நண்பர்கள், ‘நும் கருத்து யாது’ என என்னை மறித்து வினவினர்.

“உங்கள் கொடைப்பண்பு நன்னர்ப் பாராட்டத் தகுவது. பத்திலக்கப் பொருளை உவப்பொடு யார்தாம் வரவேலார்! இத்துறவுப் பண்பு செல்வர்க்கெல்லாம் வளர்வதாகுக” என்று முகவுரை துவங்கி, என்மனத்திற்பட்ட உண்மையை வஞ்சியாது உரைப்பேன். அறிவிற்பட்டாங்கு ஆய்ந்து சொல்வேன். மாசு கற்பியாதும் மயங்காதும் கேண்மின்” என்று சில கருத்துக்களை உணர்த்தினேன்.

“உலகத்துப் பிறந்த பெரியோர்கள் பலப்பலர். அவரவரெல்லாம் மக்கள் உய்ய ஆராய்ந்து வடித்த உரைகள் பலப்பல. எனினும், நாம் விடாது செய்து வரும் ஒரு கெடு போக்கு யாது? அவ்வுரைகளை மனத்திட்பத்தோடு நம் வாழ்க்கையிற் செயற்படுத்தவில்லை. கடைப் பிடித்து அன்னவர்களைப் பெருமைசெய்ய நினைக்கவில்லை. பெரியோர்தம் புகழ் உலகத்து மறைந்து விடுங்கொல் என்று நம்